மகளிரணி நிகழ்ச்சியில் வெள்ளி விளக்கு பரிசளித்த தனுஷ்.. விளக்கில் அடியில் இருந்த சின்னம் எது தெரியுமா?

Published On:

| By Pandeeswari Gurusamy

நடிகர் தனுஷ் நற்பணி இயக்க மகளிரணியை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்களுக்கு வெள்ளி காமாட்சி விளக்குகளை பரிசாக அளித்துள்ளார். விளக்கின் அடிப்பகுதியில் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது கவனம் ஈர்த்து

தமிழக முதல்வர் விஜய்யை தொடர்ந்து நடிகர் தனுஷ் அரசியலுக்கு வர உள்ளதாகச் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அவரது நற்பணி மன்றம் ‘நற்பணி இயக்கமாக’ மாற்றம் செய்யப்பட்டு, கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கான நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நற்பணி இயக்கத்தின் சார்பில் சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள செம்மஞ்சேரியில் இயங்கிவரும் தனியார் கல்லூரியில், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளைத் தனுஷ் நேரில் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் சுமார் 5,000 பேர் பங்கேற்றனர். அவர்களுக்குச் சிக்கன் பிரியாணி, முட்டை, பிரெட் அல்வா எனப் பிரம்மாண்ட விருந்து உபசரிக்கப்பட்டது.

ADVERTISEMENT

விழாவிற்கு வேஷ்டி-சட்டையில் வருகை தந்த தனுஷ், கூட்டத்தில் பங்கேற்ற பெண் நிர்வாகிகளுக்கு வெள்ளி காமாட்சி விளக்கை பரிசாக அளித்தார். நிகழ்ச்சியில் சுமார் ஐந்து நிமிடங்கள் மட்டுமே பேசிய தனுஷ், “உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி; அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.

நடிகர் தனுஷ் பரிசளித்த வெள்ளி விளக்கின் பின் பகுதியில் தாமரை சின்னம் பதிக்கப்பட்டுள்ளது தற்போது பேசுபொருளாகி உள்ளது.

நடிகர் தனுஷ் ‘தமிழக எழுச்சிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்க உள்ளதாகத் தகவல்கள் பரவி வரும் நிலையில், இந்த மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதே சமயம் தனுஷ் அரசியலுக்கு வருவதன் பின்னணியில் பாஜக உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் தாமரைச் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share