துப்பாக்கி ஹீரோ.. துப்பில்லாத ஹீரோ.. விஜய் மீது ஸ்டாலின் விமர்சனம்!

Published On:

| By Mathi

Vijay Vs MK Stalin

முதல்வர் விஜய்யை துப்பாக்கி ஹீரோ; துப்பில்லாத ஹீரோ என்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை: த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu..! கடந்த இரு மாதங்களாகத் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.

ADVERTISEMENT

இதை முன்பே கணித்துத்தான், “இது என்ன நாடா இல்லை காடா?” என நாஸ்ட்ரடாமஸ் போல தேர்தலுக்கு முன்பு விஜய் அவர்கள் பேசினாரா?

‘துப்பாக்கி ஹீரோ’ எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் ‘துப்பில்லாத ஹீரோ’ எனப் பேசத் தொடங்கிவிட்டனர்.

ADVERTISEMENT

கோட் சூட் – பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் திரு. விஜய்?

முதமைச்சருக்கான அலுவலகத்தையும், இல்லத்தையும் தயார் செய்வது தொடர்பான வேலைகளைத் தவிர, ஆறு மாத த.வெ.க. ஆட்சியில் உருப்படியாக வேறு ஒன்றுமே நடந்ததாகத் தெரியவில்லை.

ADVERTISEMENT

தனது சொகுசைப் பற்றி இருக்கும் அக்கறையில் சிறிதேனும் பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும்.

கொலைக்களமாகவும் குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் தமிழ்நாடு மாறி வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share