தனுஷ் நற்பணி இயக்க மகளிரணி சந்திப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்த விஜய், கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், பல்வேறு நடிகர்களுக்கு அரசியல் ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், தனுஷ் தொடர்ச்சியாகத் தீவிர அரசியலில் கால் வைக்கும் வகையில் பணிகளைத் தொடங்கியுள்ளார்.

முதற்கட்டமாகத் தனுஷின் நற்பணி மன்றம் ‘நற்பணி இயக்கம்’ ஆக மாற்றம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சில நாட்களுக்கு முன் தனுஷ் டெல்லி சென்று அரசியலில் ஈடுபடுவது குறித்து ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் கசிந்தன.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஜே.பி.ஆர். கல்லூரி வளாகத்தில் மகளிர் அணிக் கூட்டம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, கல்லூரி வளாகம் முழுவதும் வண்ணமயமான வரவேற்புப் பதாகைகள் மற்றும் கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து மகளிர் அணி நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர். தனுஷை வரவேற்று, “பெண்களின் குரல் உயர்ந்தால்தான் சமூகத்தின் எதிர்காலமும் உயரும்; எங்கள் அன்பின் அண்ணன் தனுஷ், எங்கள் தலைவரே!” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சிக்காக 3,000 பேர் அமரக்கூடிய பிரம்மாண்டமான குளிரூட்டப்பட்ட அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 5,000 மகளிர் அணி நிர்வாகிகள் இதில் கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மகளிர் நிர்வாகிகளுடன் தனுஷ் தனித்தனியாகப் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும், அவர்களுக்குச் சிறப்புப் பரிசுகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளார்.

கூட்டத்தில் பங்கேற்கும் பெண்கள் கைப்பேசி எடுத்துச் செல்லக் கூடாது என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பெண் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாம் விஜய் சாருக்கு ஒரு வாய்ப்பு வழங்கியது போல தனுஷ் சாருக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே! நல்லது செய்யும்போது கண்டிப்பாக ஆதரிக்கலாமே; எண்ணம்போல் வாழ்க்கை!” என்று தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share