தவெக அமைச்சரவையில் பாமகவா? : விசிக ரவிக்குமார் பதில்!

Published On:

| By Kavi

பாமகவுடன் தவெக ஒருபோதும் கூட்டணி வைக்காது என்று விசிக எம்.பி ரவிக்குமார் கூறியுள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக, அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற்ற மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் ஆதரவு தெரிவிக்கவில்லை. 

ADVERTISEMENT

தவெகவுடன் நெருக்கம் காட்டுவதாக தமிழக அரசியலில் பேசப்படுகிறது. 

அதேசமயம் பாமக மற்றும் பாஜக இடம்பெறும் எந்தக் கூட்டணியிலும்  இடம்பெறமாட்டோம் என்பது தவெக கூட்டணியில் இருக்கும் விசிகவின் நிலைப்பாடாகும். 

ADVERTISEMENT

இந்தநிலையில் புதுச்சேரியில் சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த விசிக எம்.பி ரவிக்குமாரிடம், ’தவெக அமைச்சரவையில் பாமக இடம்பெற்றால் விசிக தனித்து இயங்குமா அல்லது மீண்டும் திமுகவுடன் கூட்டணி வைக்குமா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவர், ”தவெகவுடன் பாமக ஒருபோதும் கூட்டணி அமைக்காது. தவெக ஆட்சியின் அமைச்சரவையில் பாமக பங்கேற்காது” என்று கூறினார்.

ADVERTISEMENT

அதாவது, தேர்தல் வெற்றி பிறகு தங்களிடம் 4 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆதரவு தருகிறோம் என பாமக தவெகவை அணுகியது. ஆனால், தவெக அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன்பிறகு முஸ்லீம் லீக், விசிகவின் ஆதரவை வலியுறுத்தி பெற்றனர்.

பாமகவை ஆதரவை ஏற்பதாக இருந்தால், முன்கூட்டியே பெற்றிருப்பார்கள். எதிர்காலத்திலும் ஏற்கமாட்டார்கள்” என்று கூறினார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share