அரசியல் என்ட்ரி… திரிஷா ரியாக்சன்

Published On:

| By Kavi

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் அமைந்துள்ள ஐ மொபைல்ஸ் (iMobiles) நிறுவனத்தின் புதிய ஷோரூமை நடிகை திரிஷா இன்று (அக்டோபர் 24) திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

ADVERTISEMENT

இதை முன்னிட்டு சென்னையிலிருந்து விமான மூலம் இன்று பிற்பகல் திரிஷா கோவைக்கு வருகை தந்தார். 

கோவை விமான நிலையத்தில் அவரது ரசிகர்கள் திரிஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து மாலை நடைபெற்ற கடை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ரசிகர்கள் மத்தியில் பேச முயன்றார். ஆனால், மைக் வேலை செய்யாததால் அவரால் பேச முடியாமல் போனதாக தகவல்கள் வருகின்றன. 

சிகப்பு நிற புடவையில் திரிஷா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்ட திரிஷா திறந்தவெளி காரில் 100 அடி தூரம் சாலை வலம்  மேற்கொண்டார்.

ADVERTISEMENT

நடிகை திரிஷாவை காண்பதற்காக 500க்கும் மேற்பட்ட அவரது ரசிகர்கள் காந்திபுரம் 100 அடி சாலையில் திரண்டிருந்தனர். 

அப்போது சிலருக்கு கைகுலுக்கியவாறு சென்ற திரிஷா பின்னர் அங்கிருந்து புறப்பட்டார். 

இதற்கிடையே திரிஷாவிடம் செய்தியாளர்கள் அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினர். 

இதற்கு அவர் புன்னகைத்தபடி, எந்த பதிலும் அளிக்காமல் காரில் ஏறி சென்றுவிட்டார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share