எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.
சோனி லைவ் ஓடிடியில் செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் 11 பேர் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர்.
இதில் வெங்கடேஷ் பட் உள்ளிட்ட 3 பேர் ஜட்ஜுகளாக பங்கேற்றுள்ளனர். நடிகை சமந்தா, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வருகிறார்.
இந்தநிலையில் சமந்தாவிடம் நிகழ்ச்சி தொகுப்பாளரான ஆர்.ஜே.விஜய், உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்க, அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்… விஜய் சார் என்று சமந்தா பதிலளித்தார்.
”அவர் எனக்கு லக்கி சார்ம். 3 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறோம். ஒரு மனிதராக அவர் எனக்கு பெரிய உத்வேகம். அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
அதையெல்லாம் விட்டுவிட்டு, சரியான நேரத்தில் தலைவராக இருப்பதை தேர்ந்தெடுத்து ஆட்சிக்கு வந்திருக்கிறார்” என்று புகழ்ந்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக ஜூலி கலந்துகொண்டுள்ளார். இந்தநிலையில் சமந்தா பேச பேச, கேமரா ஜூலி பக்கம் திரும்பியது. தற்போது சம்ந்தாவின் பேச்சுக்கு ஜூலி கொடுக்கும் ரியாக்ஷன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொதுக்கூட்டம் ஒன்றில் கூறிய ‘குட்டிக் கதை’ மற்றும் ஜல்லிக்கட்டு தொடர்பான கருத்துகளை விமர்சித்து ஜூலி சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டார். இது விஜய் ரசிகர்களின் எதிர்ப்பையும் கடுமையான விமர்சனங்களையும் பெற்றது.
இதைத்தொடர்ந்து தவெகவுக்கு எதிராகவும், முதல்வர் விஜய்க்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் ஜூலி பேசி வருகிறார். தற்போது அவர் முன் முன்னணி நடிகையான சமந்தா, முதல்வர் விஜய்யை புகழ்ந்து பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
