ஜனநாயகன், சென்னை லவ் ஸ்டோரி ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published On:

| By Kavi

ஜனநாயகன், சென்னை லவ் ஸ்டோரி ஆகிய படங்களின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. 

தமிழக முதல்வர் விஜயின் நடிப்பில் கடைசி படமாக வெளியான ஜனநாயகன், கடந்த ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. 

ADVERTISEMENT

இந்த படம் திரையரங்குகளுக்கு வருவதற்கு முன்னதாக தணிக்கை பிரச்சினையை எதிர்கொண்ட நிலையில், சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியானது. இதை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளதாக சென்னை போலீசார் உயர் நீதிமன்றத்தில் கூறினர்.

இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி சுமார் 350 கோடி ரூபாய் வசூலித்ததாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. 

ADVERTISEMENT

இந்த சூழலில் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் ஜனநாயகன் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுபோன்று சென்னை லவ் ஸ்டோரி படமும் வெளியாகிறது. 

ADVERTISEMENT

மாஸ் மூவி மேக்கர் தயாரிப்பில் ரவிவர்மா நம்பூரி இயக்கத்தில் உருவான சென்னை லவ் ஸ்டோரி திரைப்படம், ஜூலை 24ஆம் தேதி வெளியானது. 

சென்னை பின்னணியில் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. 60 கோடி ரூபாய் இந்த படம் வசூலித்ததாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். 

சோனி லைவ் ஓடிடி தளத்தில் வரும் 21ஆம் தேதி  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share