பாஜகவில் இணைகிறாரா மீனா? இன்ஸ்டா பதிவு!

Published On:

| By Kavi

குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தங்கரை நடிகை மீனா சந்தித்து பேசியுள்ளார். Is Meena joining BJP Instagram post

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது வரை திரையுலகில் தனியிடத்தை கொண்டிருப்பவர் நடிகை மீனா.

ADVERTISEMENT

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஜட்ஜாக கலந்துகொண்டுள்ளார். அதே சமயம் பாஜகவைச் சேர்ந்தவர்களிடம் நட்பு பாராட்டி வருகிறார்.

கடந்த ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது இல்லத்தில் விழா ஏற்பாடு செய்திருந்தார். இதில், பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த விருந்தில் மீனாவும் கலந்துகொண்டார்.

ADVERTISEMENT

தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2 படபிடிப்பு பூஜையில் நடிகைகள் குஷ்பு, மீனாவுடன் எல்.முருகனும் கலந்துகொண்டார்.

இப்படி பாஜகவினருடன் மீனா நட்பாக பழகி வந்த நிலையில், விரைவில் தமிழகத்தில் இருந்து ஒரு ரஜினி பட நடிகை மத்திய இணை அமைச்சர் ஆகிறார் என்ற தகவலும் உலா வந்தது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நடிகை மீனா குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தங்காரை நேரில் சந்தித்து பேசியிருப்பது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து மீனா இன்று (ஜூன் 23) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘உங்களைச் சந்தித்ததை மரியாதையாகவும் கௌரவமாகவும் கருதுகிறேன். உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அது எனது எதிர்காலத்தை நம்பிக்கையுடன் வழிநடத்த உதவும் என்று நம்புகிறேன். உங்களைச் சந்திக்க நேரம் கொடுத்ததற்கு மிக்க நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை தொடர்ந்து, நீங்கள் அரசியலில் காலெடுத்து வைக்கப்போகிறீர்களா? பாஜகவில் இணைய போகிறீர்களா? மத்திய அமைச்சராக போகிறீர்கள் என்று பரவும் செய்தி உண்மையா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகைகள் குஷ்பு, நமிதா, கங்கனா ரணாவத், ஆர்த்தி என ஏராளமான நட்சத்திரங்கள் பாஜகவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share