சிவகார்த்திகேயனுக்குப் பதில் தனுஷ்? வெங்கட் பிரபுவின் மெகா பட்ஜெட் Sci-Fi படத்தில் அதிரடி மாற்றம்!

Published On:

| By Santhosh Raj Saravanan

is dhanush replaces sivakarthikeyan venkat prabhu dxv movie

சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த ‘DxV’ போஸ்டர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் (Dhanush) தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட ‘DxV’ என்ற மர்மமான போஸ்டர், இணையதளங்களில் காட்டுத்தீ போல பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. போர்க்களத்தில் இருப்பது போன்ற போஸ்டரைப் பகிர்ந்து, ஜூலை 10 அன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தனுஷ் அறிவித்துள்ளார். இந்த ‘DxV’ போஸ்டரில் உள்ள ‘V’ இயக்குநர் வெங்கட் பிரபுவைக் குறிப்பதாகக் கூறப்படுவதால், கோலிவுட்டில் புதிய பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT
சிவகார்த்திகேயன் படமா… புதிய கதையா?

இயக்குநர் வெங்கட் பிரபு (Venkat Prabhu), நடிகர் சிவகார்த்திகேயனின் 26வது படத்தை (SK26) இயக்கவிருந்தார் என்பதும், இதற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்குச் சென்று VFX மற்றும் லுக் டெஸ்ட் பணிகளை மேற்கொண்டார் என்பதும் தெரிந்ததே. ஆனால், சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) தற்போது ‘சேயோன்’ படத்தில் கவனம் செலுத்தி வருவதால், வெங்கட் பிரபுவின் இத்திட்டம் தள்ளிப்போனது. இந்நிலையில், அதே பிரம்மாண்ட சயின்ஸ்-ஃபிக்ஷன் (Sci-Fi) கதையில் சிவகார்த்திகேயனுக்குப் பதிலாக தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளாரா அல்லது இது வெங்கட் பிரபு-தனுஷ் இணையும் புதிய படமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தனுஷ் கொடுத்த மாஸ் ஹிண்ட்

இப்போஸ்டரைப் பகிர்ந்த நடிகர் தனுஷ் “பணிந்தவரை விட்டு வைப்பான், பகைத்தவரை நட்டு வைப்பான்” பதிவிட்டுள்ளது எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. ‘கர’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ (OM / D55) படத்திற்கும் சாய் அபயங்கர் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இப்போஸ்டரில் உள்ள வரிகள் மற்றும் போர்க்களக் காட்சிகள் ஒரு டைம் டிராவல் அல்லது ஏலியன் கதைக் களமாக இருக்கலாம் என்றும் சினிமா ஆர்வலர்கள் கணித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ஜூலை 10ல் வெளியாகும் அதிகாரப்பூர்வ உண்மை!

ஏற்கனவே தனுஷ் கைவசம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‘ஓம்’, தமிழரசன் பச்சமுத்து இயக்கும் திரைப்படம், வெற்றிமாறன் மற்றும் மாரி செல்வராஜ் படங்கள் என அடுத்தடுத்த மாஸ் ப்ராஜெக்ட்டுகள் வரிசைகட்டி நிற்கின்றன. தனுஷ்-வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைவது உறுதி செய்யப்பட்டால், அது தமிழ் சினிமாவின் மிகப்பரிமாண Sci-Fi படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த யூகங்களுக்கும் கேள்விகளுக்கும் ஜூலை 10 வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு முற்றுப்புள்ளி வைக்கும்.

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share