இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

balebalu
காலங்கள் எத்தனை வகைப்படும் ?
இறந்த காலம்
எதிர் காலம்
” ரீல்ஸ் காலம்” சார்

படிக்காதவன்
திமுகவுடன் நட்பு தொடர்கிறது
– திருமாவளவன்
-நல்ல காதல்
கள்ளக்காதலானது…

Mannar & company
ஞாயிறு கனவு…
திங்கள் அதிர்ச்சி…
செவ்வாய் புரிந்துக்கொள்ளுதல்…
அதுக்கப்புறம்தான் வாரத்தை நாம ஏற்றுக்கொள்கிறோம்!

கோவிந்தராஜ்
நீங்க ஏன்டா இந்த RTO office, போலீஸ் ஸ்டேசன், கலெக்டர் ஆபிஸ் பக்கம்லாம் ஆய்வு பண்ண போகமாட்றீங்க?
அங்கலாம் போனா கேமராமேனையும் சேத்து எங்களையும் கட்டி வச்சி அடிச்சி, FIR போட்ருவாங்க. இந்த பிரச்சனைக்குதான் சத்துணவு ஆயா, தொடக்கப்பள்ளி தமிழ் டீச்சர், Govt Hospital னு முடிச்சிக்கிறோம்.

படிக்காதவன்
ஒரு தவறு செய்தால்
அதை தெரிந்து செய்தால்
அவனுக்கு அமைச்சர் பதவி கொடுத்துவிடு…

ச ப் பா ணி
பாவங்கள்
காசாக்கப்படுகின்றன
பரிகாரத்தில்

Selva Bharathi
ஆன்லைன் பரிவர்த்தனைகளிலும், பேங்க் ஸ்டேட்மெண்ட்களிலும் மட்டுமே உயிர் வாழ்கின்றன, பைசாக்கள்.

செங்காந்தள்
ஒரு காலத்தில்…
மழை பெய்தால் வீட்டின் தண்ணீர் சாலைக்குச் சென்றது.
இன்று… மழை பெய்தால் சாலையின் தண்ணீரே வீட்டிற்குள் வருகிறது…!!!
லாக் ஆஃப்
