கோமாளி’, ‘லவ் டுடே’ போன்ற வெற்றிப் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தற்போதைய ட்ரெண்ட் செட்டராக வலம் வரும் பிரதீப் ரங்கநாதன், தற்போது தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். ‘பி.ஆர். ஷோ’ (PR Show) என்ற பெயரில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, தயாரிப்பாளராகக் களமிறங்கியுள்ளார். அவரது தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (ஜூலை 6) வெளியாகியுள்ளது.
6 முன்னணி இயக்குநர்களுடன் மெகா கூட்டணி
பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) இந்த முதல் தயாரிப்புப் படம், வழக்கமான கமர்சியல் படமாக இல்லாமல் ஒரு சுவாரசியமான ஆந்தாலஜி திரைப்படமாக உருவாகவுள்ளது. சமகாலத் தமிழ் சினிமாவின் மிக தனித்துவமான 6 இயக்குநர்கள் இணைந்து இத்திரைப்படத்தை இயக்க உள்ளனர். பிரதீப் ரங்கநாதனின் கதையை 6 வெவ்வேறு பகுதிகளாக இந்த இயக்குநர்கள் இயக்கவுள்ளனர். அவர்களுள் பெயர்கள் தற்போது வெளியாகியுள்ளது.
‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu), இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ படத்தை இயக்கிய இவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ படத்தை இயக்கிக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜு
‘பிரேமலு’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு தென்னிந்தியாவின் ஹாட் சென்சேஷனாக வலம் வரும் நடிகை மமிதா பைஜு (Mamitha Baiju), இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 6 வெவ்வேறு இயக்குநர்களின் மாறுபட்ட பார்வையில், மமிதா பைஜுவின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் அழுத்தமான கதைக் களமாக இது இருக்கும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இவர்களோடு, ஸ்வாசிகா மற்றும் சிவாஜி ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு வளர்ந்து வரும் இளம் இசை அமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். அவர் இசையில் உருவாகியிருக்கும் ‘ஆனே வாலே ஸ்டார்’ (Aane Waale Star) என்கிற தீம் பாடலுடன் இப்படத்தின் மாஸான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
மற்ற இயக்குநர்கள் யார்?
பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து ஆகிய இருவருமே சமகால இளைஞர்களின் பல்ஸை நன்கு அறிந்தவர்கள் என்பதால், இந்தத் தயாரிப்பு இப்போதே கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் இதில் இணையவுள்ளனர். இந்த அந்தோலோஜியை விஷால், யாஷ், நரேன் சோட, சாணக்கியன், தனுஷ் குமார், இளம்பரிதி இயக்கவுள்ளனர். அடுத்தடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
