இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

Mannar & company
அரசியலோட உண்மையான வளர்ச்சி…
எதிர்க்கட்சி அலுவலகம் காலியாகுறதுல இல்ல,
மக்கள் வளமா இருக்குறதுல தான் இருக்கு.

Sasikumar J
“யார் சொல்றதை எடுத்துக்கணும், யார் சொல்றதை இக்னோர் பண்ணணும்னு தெரிஞ்சா போதும்… நாள் மட்டும் இல்ல, வாழ்க்கையே நிம்மதியா போய்கிட்டே இருக்கும்..!”

அன்பு நவீன்
அ தி மு க be like…
நாங்கள் தான் அதிமுக எங்களுக்கு தவெகவில் கிளைகள் உள்ளது

ArulrajArun
பழைய பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல புது பஸ் ஸ்டாண்ட் கட்டி , அந்த புது பஸ் ஸ்டாண்ட் பழைய பஸ் ஸ்டாண்ட் ஆனாலும், அந்த பஸ் ஸ்டாண்ட் புது பஸ் ஸ்டாண்ட் தான் …
Mannar & company
ஒரு கட்சி வளர எதிர்க்கட்சிக் காரணமா இருக்கணுமே தவிர..
எதிர்க்கட்சிக்காரங்களே காரணமாக இருக்கக்கூடாது!

ச ப் பா ணி
அந்த ஊருக்கு அதிகம் பஸ் வசதி இல்லை என்பதில் கிராமமாய் மீந்து நிற்கிறது
நகரமாய் மாற முடியாமல் நிற்கும் ஊர்.
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஏன் மாப்ள, என் மக அதான் உங்க பொண்டாட்டி, எவ்வளவு கெஞ்சி கேட்டாலும் அவ கிட்ட சிரிச்சு பேச மாட்டேங்கறீங்க..?
அவ தான் மாமா எங்களுக்குள்ள ஒரு Serious relationship வேணும்னு சொன்னா..
iQKUBAL
ஆணின் கையிலிருக்கும் தேநீர் குவளை மட்டுமே அறியும் அவனின் ஆயிரத்தெட்டு கவலைகளை..
அண்ணாச்சி
அதிமுகவிலிருந்து விலகியதற்கான காரணத்தை உடைத்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்
-வேறென்ன…
” மக்கள் சேவை “..அதான..!!

லாக் ஆஃப்
