ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு வருவாரா? இல்லை குஜராத் அணியிலேயே தொடர்வாரா? இந்த விவகாரம் தான் நேற்று சமூக வலைதளங்களில் மிகுந்த விவாதத்திற்கு உள்ளானது. ipl2024 rohit sharma rejected hardik pandya
இந்த 2024 ஐபிஎல் தொடர் என்றும் இல்லாத அளவுக்கு மிகுந்த பரபரப்புக்கு உள்ளாகி இருக்கிறது. காரணம் ஹர்திக் பாண்டியா என்னும் ஒரு வீரருக்காக மும்பை, குஜராத் என இரண்டு பெரிய அணிகள் போட்டி போடுவது தான்.
நேற்று(நவம்பர் 26)மாலை 5.25 மணிக்கு ஹர்திக் பாண்டியாவை தக்க வைப்பதாக குஜராத் அணி அறிவித்தது.
ஆனால் 2 மணி நேரம் கழித்து 7.25 மணிக்கு அவரை மும்பை அணி வாங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும் 15 கோடி ரூபாயை பணமாக கொடுத்து அவரை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கி விட்டதாகவும் கூறப்பட்டது.
இதனால் கிரிக்கெட் வட்டாரங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை அனைவரும் உச்சக்கட்ட பரபரப்புக்கு ஆளாகினர்.

இந்த நிலையில் கிட்டத்தட்ட மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா வருவது உறுதியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
துபாயில் நடைபெறும் மினி ஏலத்துக்கு முன்பு டிசம்பர் 12-ம் தேதி வரை வீரர்களை மாற்றி கொள்ளலாம் என ஒரு விதி இருக்கிறது.
எனவே இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக மும்பை இந்தியன்ஸ் அணி டிசம்பர் 12-ம் தேதி அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இவ்வளவு களேபரங்களுக்கும் காரணம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தான் என்று, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜியோ சினிமாவில் அவர், கடைசி நிமிடத்தில் ரோஹித் சர்மா மீண்டும் ஹர்திக் பாண்டியாவை வாங்குவதற்கு பதிலாக கேமரூன் கிரீனை தக்கவைத்து கொள்ளலாம் என அணி நிர்வாகத்திடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
https://twitter.com/sigmakrixhna/status/1728760283014013322
இவ்வளவுக்கு பின்னரும் ஹர்திக்கை வாங்கும் முடிவில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி பின்வாங்கவில்லையாம்.
ரூபாய் 17.75 கோடிகள் கொடுத்து எடுக்கப்பட்ட கேமரூன் கிரீனை பெங்களூர் அணிக்கு கொடுத்து விட்டு ரூபாய் 15 கோடிகள் கொடுத்து ஹர்திக் பாண்டியாவை வாங்கி விட்டதாம்.
விரைவில் மும்பை இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரம் குஜராத் அணியும் தன்னுடைய பங்கிற்கு அடுத்த கேப்டனை தேர்வு செய்து விட்டதாம். அதன்படி சுப்மன் கில் தான் அந்த அணியின் அடுத்த கேப்டன் என்று கூறப்படுகிறது.
எது எப்படியோ துபாயில் டிசம்பர் 19-ம் தேதி நடைபெறவுள்ள மினி ஏலத்திற்கு முன்பாக ஐபிஎல் அணிகள் தங்களிடம் இருக்கும் வீரர்கள் குறித்த விவரங்களை வெளியிடுவார்கள். அப்போது இந்த குளறுபடிகளுக்கு எல்லாம் கண்டிப்பாக முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா ipl2024 rohit sharma rejected hardik pandya
”எனக்கு சென்னை ரொம்ப பிடிக்கும்”: ரன்பீர் கபூர்
”துணைமுதல்வர் ஆவது குறித்து முதல்வர் தான் முடிவெடுப்பார்”: உதயநிதி ஸ்டாலின்
