தனது பிறந்தநாளை முன்னிட்டு அறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். udhayanidhi stalin on his birthday
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது 46வது பிறந்தநாளை இன்று (நவம்பர் 27) கொண்டாடுகிறார்.
அவருக்கு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் பொன்முடி, சேகர் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதியிடம், துணை முதல்வர் ஆகிவிடுவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “அதெல்லாம் முதல்வர் தான் முடிவெடுப்பார். நான் எப்படி சொல்ல முடியும். அமைச்சரான பிறகு என்று எந்த ஸ்பெஷலும் கிடையாது. ஒவ்வொரு பிறந்தநாளும் மக்கள் நல திட்டங்களை சேகர்பாபு அண்ணன் செய்வார். அதனால் ஒவ்வொரு பிறந்தநாளும் திருப்தியாக இருக்கும்.
டிசம்பர் 17 ஆம் தேதி இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. அதற்கு இளைஞரணி செயலாளர்கள் அனைவரும் எழுச்சியோடு கலந்து கொள்ள வேண்டும்” என்றார்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் இருவரையும் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார் உதயநிதி ஸ்டாலின். அப்போது, உதயநிதி ஸ்டாலின் “குடியரசுத் தலைவர் – ஆளுநர் அதிகாரங்கள்” என்ற புத்தகத்தை முதல்வருக்கு பரிசாக கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
தங்கம் விலை உயர்ந்தது: இன்றைய நிலவரம்!
முதல்வரை போல் உதயநிதிக்கும் பிறந்தநாள் விழா ஏற்பாடுகள்!
Bigg Boss 7 Day 56: “என்ன உங்க டீம்ல சேர்க்காதீங்க”… பூர்ணிமாவை ரோஸ்ட் செய்த கமல்ஹாசன்
சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் இணைந்த மெட்ராஸ் சாப்பர்ஸ்!
udhayanidhi stalin on his birthday