ஹாக்கி

காமன்வெல்த் ஆக்கி: அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி!

விளையாட்டு

காமன்வெல்த் ஆக்கி போட்டியில் இந்திய ஆண்கள் அணி  வேல்ஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா இந்த காமன்வெல்த் போட்டிகளில் இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.

காமன்வெல்த் ஆண்களுக்கான ஹாக்கி பிரிவில் இந்திய அணி தனது முதல் போட்டியில் கானாவை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து, இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இங்கிலாந்தை டிரா செய்தது. பின்னர் கனடாவை 8-0 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 4) நடைபெற்ற கடைசி குரூப் ஆட்டத்தில் இந்திய அணி வேல்ஸ் அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில் இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் சிங் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இந்திய வீரர்களின் வேகத்துக்கு வேல்ஸ் அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை.

இறுதியில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதி போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

-ராஜ்

காமன்வெல்த் போட்டி: இறுதிப்போட்டியில் 3 இந்தியர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.