காமன்வெல்த் போட்டி: இறுதிப்போட்டியில் 3 இந்தியர்கள்!

விளையாட்டு

காமன்வெல்த்தில் இன்று (ஆகஸ்ட் 2) நடைபெற்ற போட்டிகளில் இந்தியர்கள் 3 பேர் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 72 நாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ள இந்தப் போட்டியில் இந்தியாவும் பல பிரிவுகளில் கலந்துகொண்டு விளையாடி வருகிறது. இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 2) பிற்பகல் நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 8.05 மீட்டர் நீளம் தாண்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு இந்திய வீரர் முகம்மது அனீஸ் 7.68 மீட்டர் தாண்டி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார். பெண்கள் ஷாட் புட்டில் இந்தியாவின் மன்பிரீத் கவுர் 16.78 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
ஜெ.பிரகாஷ்

செஸ் ஒலிம்பியாட்: இந்திய B அணி முதலிடம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.