2029-ல் பிரதமர் பதவிக்கான போட்டியில் மோடி, ராகுல் காந்தி, விஜய்க்கு எத்தனை சதவீதம் பேர் ஆதரவு என்பதை இந்தியா டுடே-ன் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
இந்தியா டுடே நடத்திய “Mood of the Nation” கருத்து கணிப்பு, ஜூலை 1-ந் தேதி முதல் ஆகஸ்ட் 25-ந் தேதி வரை நேரடியாக 25,184 நடத்தப்பட்டது. இந்தியா டுடே நிறுவனத்துடன் இணைந்து சி வோட்டர் நிறுவனம் கடந்த 6 மாதங்களாக 91,795 இதேபோல கருத்து கணிப்பை நடத்தியது.


இந்த கருத்து கணிப்பின் முடிவுகள்:
2029-ல் யார் பிரதமர்?
- மோடி- 48.7%
- ராகுல் காந்தி- 27.1%
- விஜய்- 9.2%
- மமதா பானர்ஜி- 2%
- அகிலேஷ் யாதவ் – 1.7%
- அபிஜித் தீப்கே- 1.3%
- அரவிந்த் கெஜ்ரிவால் 1.2%
