சட்டமன்றத்தில் இடம் மாறி அமர்ந்த முதல்வர் விஜய் : செங்கோட்டையனிடம் சீரியஸ் டிஸ்கசன்!

Published On:

| By Kavi

சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் இடம் மாறி அமர்ந்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் முதல்வருக்கு தனி இருக்கையும், அமைச்சர்களுக்கு தனி வரிசையும் அவர்களுக்கு பின்னால் எம்எல்ஏக்களுக்கும் இடம் ஒதுக்கப்படும். 

ADVERTISEMENT

முந்தைய காலங்களில், பேரவைக்கு வரும் முதல்வர், அவைக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு தனது இருக்கையில் அமர்ந்து விடுவார். 

ஆனால் முதல்வர் விஜய் பேரவைக்குள் வந்ததும், உள்ளே சென்று அனைவரையும் பார்த்து வணக்கம் வைத்துவிட்டு அதன் பிறகு தான் தனது இருக்கையில் வந்து அமர்கிறார். 

ADVERTISEMENT

இந்த சூழலில் இன்று (ஆகஸ்ட் 27) பிற்பகல் தனது இருக்கையில் அமராமல் அமைச்சர்கள் வரிசையில் சென்று அமர்ந்துள்ளார். 

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனாவுக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே அமர்ந்த முதல்வர் விஜய், அவை முன்னவரான செங்கோட்டையனிடம் சீரியஸாக டிஸ்கஸ் செய்து கொண்டிருக்கிறார்.

ADVERTISEMENT

இது தொடர்பான வீடியோ பேரவை லைவில் வெளியாகி இருக்கும் நிலையில் ஏன் முதல்வர் இடம் மாறி அமர்ந்தார். இருவரும் என்ன ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share