சட்டசபையில் நாள்தோறும் மக்கள் பிரச்சனைகளை பேசாமல் ‘சண்டை மன்றமாக’ மாறிவருவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
தமிழக சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 27) பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ. பேசியதாவது: இரண்டு நாட்களாக கேப்டனுடைய பிறந்தநாளுக்கு (விஜயகாந்த்) வாழ்த்துத் தெரிவித்த முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும், திமுகவின் தலைவர் அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கும், அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும், அதேபோல மருத்துவத்துறையினுடைய அமைச்சர் அருண் ராஜ் அவர்களுக்கும் யாரெல்லாம் கேப்டனுக்கு வாழ்த்து சொன்னீங்களோ, அனைவருக்கும் என் பணிவான வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு நாம பேசுறது மானியக் கோரிக்கை. அவைத் தலைவரே உங்ககிட்ட கெஞ்சிக் கேட்கிறேன். நாங்களும் பொறுமையா ஒரு வாரம், 10 நாளா பார்த்துக்கிட்டேதான் இருக்கிறோம். மானியக் கோரிக்கையைத் தவிர மத்த எல்லா நிகழ்ச்சியும் இங்கு நடக்குதுங்க.
பொதுவா நான் சொல்றேங்க. நான் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி கிடையாது. நான் பொதுவாக ஒரு சட்டமன்ற உறுப்பினர். இங்கு மக்களுக்காக இருக்குதுதான் இந்த சட்டமன்றம்.
ஓகே, உங்க கருத்து சொல்லுங்க. ஒரு அஞ்சு நிமிஷம் சொல்லலாம். ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ, ஆனா டெய்லி 6:30 மணி வரைக்கும் போவதற்கான ரீசன், ஆளாளுக்கு ஒருத்தர் மேல குறை சொல்லிக்கிட்டேதான் இருக்குறோமே ஒழிய, சண்டை போட்டுக்கிட்டேதான் இருக்குறோங்களே ஒழிய, இதனால தமிழ்நாட்டுக்கோ, மக்களுக்கோ, என்ன பலன் என்ற கேள்வியை இங்கே நான் கேட்கிறேன்.

ஆளுங்கட்சியைத் தேர்ந்தவர்கள், இதுவரைக்கும் ஆட்சி செய்தவர்கள், எல்லாரும் சிறப்பாதான் ஆட்சி செஞ்சிருக்காங்க. இதுவரைக்கும் யாருமே இங்கே குறை சொல்ல முடியாது. எந்த ஆட்சியாக இருக்கட்டும். அவங்க அவங்க காலகட்டத்திற்கு, தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும், அவங்க அவங்க நல்லதுதான் பண்ணி இருக்காங்க. இன்னைக்கு உங்களுக்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது, உங்கள் ஆட்சியை மக்களுக்கும் இந்த நாட்டுக்கும் நல்லது செய்வதற்கு, நீங்கள் எல்லா முயற்சியும் எடுங்கள். அதற்கு மக்களும் சரி, எல்லாரும் துணை நிற்போம் என்றுதான் சொல்கிறோம்.
ஆனால், நைட் அண்ட் டே எக்ஸாமுக்கு கூட இப்படி யாரும் பிரிப்பேர் பண்ணி இருக்க மாட்டாங்க. எல்லா சட்டமன்ற உறுப்பினர்களையும் நான் சொல்றேன், நைட் அண்ட் டே உட்கார்ந்து பிரிப்பேர் பண்ணி வராங்க. ஆனால், இங்க வாய்ப்பே கிடைக்க மாட்டேங்குறது. எப்ப பாரு சண்டை, சண்டை, சண்டை அப்படின்னா, மக்களுக்கு இதனால் என்ன பலன்?
விவாதம் என்பது ஒரு அளவுக்கு இருந்தால் ரசிக்கலாம். கடந்த இரண்டு நாட்களா, இங்கே நான் வரல. மக்களோடு சந்திக்கிறேன். மக்கள் என்ன சொல்றாங்களோ, அதை இங்கே நான் குறிப்பிடணும். இதுவரைக்கும் சட்டமன்றம் நல்லா போயிட்டு இருந்துச்சு. நாங்களும் இன்ட்ரஸ்டிங்கா டெய்லி பார்த்துக்கிட்டு இருந்தோம். ஆனா, ஒரு மூணு, நாலு நாளா வெறும் சண்டைதான் போகுதே ஒழிய, இதனால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. பல நாங்க வந்து டிவி ஆஃப் பண்ணிடுறோம்றாங்க.
ஏன் இதை சொல்றேன்னா, இங்கே மக்களுக்காக பேசணும், மக்களுக்கு நல்லது நடக்கிறதுக்குதான் இந்த சட்டசபை என்பதை தயவு செஞ்சு எல்லாரும் புரிஞ்சுக்கணும். வாக்குவாதம் பண்ணுங்க, ஆனா 24 மணி நேரம் இருக்கிற 6:30 மணி வரைக்கும் வெறும் சண்டை போனா எப்படி? நானும் பார்க்கிறேன். 2 மானியக் கோரிக்கை கூட நம்மளால பேச முடியவில்லை..
அவைத் தலைவரே! இது ரொம்ப ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு. எல்லாருக்கும் நீங்க வாய்ப்பு கொடுங்க. பேசினவங்களேதான் பேசுறாங்க, சண்டை போட்டவங்களேதான் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க. அப்புறம் எதற்கு?
அப்போ எல்லாரும் அவங்க அவங்க வேலையை விட்டுட்டு, எல்லாரும் அவங்க அவங்க வேலையை விட்டுட்டு, எக்ஸாமுக்கு பிரிப்பேர் பண்ற மாதிரி 3:0மணி, 4:00 மணி வரைக்கும் பிரிப்பேர் பண்ணிட்டு இங்க வந்து உட்கார்ந்து, கடைசி வரைக்கும் மக்களைப் பற்றி பேசவே முடியல, வேடிக்கை பார்த்துட்டு சண்டையை பார்த்துட்டு போறதுக்கா?
இங்கே பாருங்க, நான் வந்து கடந்த ஒரு வாரமா எதுவுமே பேசல. நானும் ரொம்ப பொறுமையா, ஓகே, மக்களுக்காக பேசணும், பேசணும்.
மக்களுக்காக இங்க எல்லாரையும் பேச வைக்கணும். இது சட்டமன்றம், சண்டை மன்றம் கிடையாது. அதனால, ”அவர் பேசாத வரைக்கும்” அமைதியா போகுதுங்க.. ஒன்ஸ் அவர் பேச ஆரம்பிச்சாங்க… தயவு செஞ்சு நீங்க அனுமதி தராதீங்க. எல்லா உறுப்பினருக்கும் வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டுக்கொண்டு அமர்கிறேன். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
