ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டு தீர்மானத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு!

Published On:

| By Minnambalam Desk

Rajnath Singh SCO

சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டு தீர்மானத்தில், பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான கண்டனங்கள் இடம் பெறாததால் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கையெழுத்திட மறுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. India SCO China Rajnath Singh

சீனாவின் கிங்டாவோவில் இன்று ஜூன் 25 முதல் 26 வரை-ந் தேதி வரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO Shanghai Cooperation Organisation எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்நிலைக் குழு பங்கேற்றுள்ளது.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில், பிராந்திய, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சகங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சர்கள் விவாதித்தனர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கொள்கைகள் மற்றும் ஆணைகளுக்கான இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கினார்.
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை அவர் சுட்டிக்காட்டினார்.

ADVERTISEMENT

பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை ஒழிக்க கூட்டு மற்றும் நீடித்த முயற்சிகளுக்கு அழைப்பு விடுப்பார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்குள் சிறந்த வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இணைப்புக்கான அவசியத்தையும் அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கையெழுத்திட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவின் பஹல்காமில் பாகிஸ்தான் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலை கண்டிக்காத இந்த தீர்மானத்தை ஏற்க முடியாது என ராஜ்நாத்சிங் திட்டவட்டமாக கூறியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share