தொழிற்சாலை உற்பத்தி திறனில் ஆறாவதாக இந்தியா

Published On:

| By Balaji

கடந்த நிதியாண்டில், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களின் தயாரிப்பில் இறுதிக் காலாண்டில் மட்டும் 1% அளவுக்கு வளர்ச்சியை எட்டினாலும், 2014 முதல் 2015 ஆண்டுக்கிடையில் 7.6 சதவிகித வளர்ச்சியை எட்டினாலும், தொழில் உற்பத்தியில், சர்வதேச அளவில் ஒன்பதாம் இடத்தில் இருந்த இந்தியா, தற்போது ஆறாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் தொழில்துறை அபிவிருத்தி அமைப்பு தனது ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ள தகவலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, கொரியா ஆகிய நாடுகள் முறையே முதல் ஐந்து இடத்தைப் பிடித்துள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share