பெண்கள் குறித்து கொச்சையாக பேசிய அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது. indecent speech stalin stripped ponmudi
வனத் துறை அமைச்சரான பொன்முடி கடந்த ஞாயிறு அன்று பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். அதில் அவர் பேசிய பேச்சு பெண்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விலைமாது என்று பாலியல் தொழிலாளர்களை குறிப்பிட்டு மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசியிருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் திமுக துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

“அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது” என்று அமைச்சருக்கு எதிராக காட்டமாக பதிவிட்டுள்ளார்.
இந்தநிலையில் அமைச்சரின் திமுக துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து பொன்முடி விடுவிக்கப்படுகிறார் என்று முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வழக்கமாக கட்சி ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்த அறிவிப்புகளை பொதுச்செயலாளர் துரைமுருகன் தான் வெளியிடுவார். தற்போது பொன்முடி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலினே வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.