நீண்ட ஆயுள்…நிறைந்த செல்வம்…முதலமைச்சரை வாழ்த்திய இளையராஜா

Published On:

| By Jegadeesh

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு இசையமைப்பாளரும், எம்.பி.யுமான இளையராஜா மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை(மார்ச் 1 ) தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். இதையொட்டி பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

ADVERTISEMENT

முன்னதாக இன்றைய தினம் நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இசையமைப்பாளரும், எம்.பி.யுமான இளையராஜா தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில் “நீண்ட ஆயுள், நிறை செல்வம், ஓங்கு புகழோடு வாழ வேண்டும்” என குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதேபோல் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ”மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்… மக்களுக்கு “தி”னமும் “மு”ழு உடல் நலத்துடன் “க”டமையாற்ற பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ADVERTISEMENT

மேகாலயா தேர்தல்: வெற்றி வாய்ப்பு யாருக்கு?

நாகாலாந்து EXIT POLL : வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Photo of author
Jegadeesh
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share