வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது.
திரிபுரா மாநிலத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 16-ம் தேதியே முடிவடைந்தநிலையில், மேகாலயாவிலும், நாகாலாந்திலும் நேற்று (பிப்ரவரி 27 ) வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
மார்ச் 2 ஆம் தேதி மூன்று மாநிலங்களுக்கும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன. இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
வாக்குப்பதிவு நடந்துமுடிந்த 59 தொகுதிகளுக்கான, ஜிநியூஸ் -மாட்ரிஸ்-ன் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி,
தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி (பாஜக+தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி) 39 இடங்களும், நாகா மக்கள் முன்னணி 3 இடங்களும், காங்கிரஸ் கட்சி 2 இடங்களும், மற்றவை 15 இடங்களும் கைப்பற்ற வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல இந்தியா டுடே-ன் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி,
தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி (பாஜக+தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி) 38-48 இடங்களும், நாகா மக்கள் முன்னணி 3-8 இடங்களும், காங்கிரஸ் கட்சி 1-2 இடங்களும், மற்றவை 5-15 இடங்களும் கைப்பற்ற வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
டைம்நவ் – இ.டிஜி. ரிசர்ஸ் கருத்துக்கணிப்பின் படி,
தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி (பாஜக+தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி) 39- 49 இடங்களும் , நாகா மக்கள் முன்னணி 4 லிருந்து 8 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜான்கிபாத் நடத்திய கருத்து கணிப்பில்,
தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி (பாஜக+தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி) 35-45 இடங்களும் , நாகா மக்கள் முன்னணி 6-லிருந்து 10 இடங்களிலும் மற்றவை 9-லிருந்து 15 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பிரதமர் உடனான சந்திப்பு திருப்தியாக அமைந்தது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நடிகர் விஷால் படப்பிடிப்பில் மீண்டும் விபத்து!