மேகாலயா தேர்தல்: வெற்றி வாய்ப்பு யாருக்கு?
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் படி மேகாலயா மாநிலத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரியவந்துள்ளது.
60 தொகுதிகளை கொண்ட மேகாலயா மாநிலத்திற்கு நேற்று(பிப்ரவரி 27) தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் மக்கள் தேசிய கட்சி, பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் போட்டியிடுகின்றன. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தநிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளது.
தேசிய மக்கள் கட்சி
INDIA TODAY 18-24 , TIMES NOW 22, INDIA NEWS 11-16, ZEE NEWS 21-26
காங்கிரஸ்
INDIA TODAY 6-12, TIMES NOW -3, INDIA NEWS 6-11, ZEE NEWS 3-6
திரிணாமூல் காங்கிரஸ்
INDIA TODAY 5-9, TIMES NOW -0, INDIA NEWS – 0, ZEE NEWS – 8-13
பாரதிய ஜனதா கட்சி
INDIA TODAY 4-8, TIMES NOW -5, INDIA NEWS 3-7, ZEE NEWS 6-11
மற்றவர்கள்
INDIA TODAY 0, TIMES NOW – 30, INDIA NEWS 5-12, ZEE NEWS 10-19
மேகாலயா மாநிலத்தில் 59தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. ஆட்சி அமைக்க 31தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய மக்கள் கட்சி 19 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும், ஐக்கிய ஜனநாயக கட்சி 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதனால், தேசிய மக்கள் கட்சி, பாஜக, ஐக்கிய ஜனநாயக கட்சி ஆகியவை தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. இந்த வருடம் பாஜக, தேசிய மக்கள் கட்சி தனித்து களம் காண்கின்றன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் படி யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடிக்கும் என்று தெரியவந்துள்ளது.
செல்வம்
பிரதமர் உடனான சந்திப்பு திருப்தியாக அமைந்தது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்