ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்… காத்திருப்போர் பட்டியலில் உதயச்சந்திரன் ஐஏஎஸ்

Published On:

| By Kavi

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். ஆட்சி மாறியிருக்கும் நிலையில் ஐஏஎஸ் அதிகாரிகள் இன்று (மே 12) மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து தலைமை செயலாளர் சாய் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

முன்னாள் தலைமை செயலாளரான விடுப்பில் இருந்த என்.முருகானந்தம்  வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராகவும்

ADVERTISEMENT

 

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர் எம்.ஏ. சித்திக் நிதித்துறை செயலாளராகவும், 

ADVERTISEMENT

மாநிலத் திட்ட இயக்குநர்  ( ராஷ்ட்ரிய உச்சதார் சிக்ஷா அபியான்) சுவர்னா,  சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலைய துறை முதன்மை செயலாளராகவும், 

கூட்டுறவு சங்க பதிவாளர் நந்தகுமார் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மேலாண் இயக்குநராகவும்  மாற்றப்பட்டுள்ளனர். 

உதயச்சந்திரனுக்குப் பதிலாக நிதித் துறை  செயலாளராக சித்திக் பொறுப்பேற்கிறார். உதயச்சந்திரன் ஐஏஎஸுக்கு எந்த துறையும் ஒதுக்கப்படவில்லை. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கிறிஸ்துராஜிற்குப் பதிலாக டாஸ்மாக் மேலாண் இயக்குநராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share