காங்கிரஸ் அலுவலகத்திற்கு சென்ற முதல்வர் விஜய்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்ததுள்ளது. தமிழக முதலமைச்சராக மே 10ம் தேதி விஜய் பதவியேற்றுக் கொண்டார்.

முதலமைச்சர் விஜய், பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாகப் பதவியேற்ற நிலையில், நேற்று பிற்பகல் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரின் இல்லங்களுக்கு நேரில் சென்று மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து, ஆதரவு அளித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சியின் அலுவலகத்திற்கு இன்று நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்க்கு, ஐயூஎம்எல் தேசியத் தலைவர் காதர் மொகைதீன் வாழ்த்து தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, தற்போது முதலமைச்சர் விஜய் தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான திருவல்லிக்கேணியில் உள்ள சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றார். காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை அவரை வரவேற்றார். காங்கிரஸ் மேல்நிலைப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் முதலமைச்சர் விஜய்க்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் படத்திற்கு முதலமைச்சர் விஜய் மரியாதை செலுத்தினார்.

ADVERTISEMENT

முதல்வர் விஜய்க்கு காங்கிரஸ் நிர்வாகிகள் காங்கிரஸ் ஒரு சகாப்தம் என்ற புத்தகத்தை பரிசளித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share