தமிழக வேளாண் உற்பத்தி ஆணையராக இருந்த சங்கர் ஐஏஎஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் எம்.சாய்குமார் இன்று வெளியிட்டுள்ள அரசாணையில்,
”வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளராகப் பணியாற்றி வந்த சங்கர் ஐஏஎஸ் தொல்லியல் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
சமூக நீதித்துறை செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் என்.சுப்பையன், கூடுதலாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆணையர் மற்றும் செயலாளராகப் பொறுப்பு வகிப்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய எஸ்.பி.யாக, நெல்லை மாநகர மேற்குபிரிவு துணைக் காவல் ஆணையர் அன்ஷல் நாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி எஸ்.பியாக இருந்த ஸ்டாலின் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
