சென்னையில் இன்று (செப்டம்பர் 11) ஒரு சரவன் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ.1,920 வரை குறைந்த நிலையில் மாலையில் மீண்டும் ரூ.1,120 வரை உயர்ந்துள்ளது
சர்வதேச சந்தை விலை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்த நிலையில் மாலையில் மீண்டும் ரூ.10,000 உயர்ந்துள்ளது.
தற்போதைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று காலை ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ. 240 குறைந்த நிலையில் மாலையில் மீண்டும் ரூ.140 உயர்ந்து ரூ.14,155 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,120 உயர்ந்து ரூ.1,13,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் இன்று காலை ஒரு கிராம் ரூ.240 குறைந்து ரூ.11,785க்கு விற்பனை செய்யப்பட்டது. மாலையில் ஒரு கிராம் ரூ. 140 உயர்ந்து ரூ.11925க்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் ஒரு சவரன் ரூ.1,120 உயர்ந்து ரூ.95,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய வெள்ளி விலை நிலவரம்
அதேபோல் ஒரு கிராம் வெள்ளி இன்று காலை ரூ.10 குறைந்து ரூ.245க்கு விற்பனை செய்யப்பட்டது. மீண்டும் மாலையில் ரூ. 10 உயர்ந்து ரூ.255க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிலோ வெள்ளி ரூ.10,000 உயர்ந்து ரூ. 2,55,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)
| 10-9-2026 | 1,14,040 |
| 9-9-2026 | 1,13,200 |
| 8-9-2026 | 1,14,160 |
| 7-9-2026 | 1,13,040 |
| 6-9-2026 | 1,13,520 |
| 5-9-2026 | 1,13,520 |
| 4-9-2026 | 1,14,880 |
| 3-9-2026 | 1,13,920 |
| 2-9-2026 | 1,11,600 |
| 1-9-2026 | 1,13,400 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)
| 10-9-2026 | 255 |
| 9-9-2026 | 255 |
| 8-9-2026 | 255 |
| 7-9-2026 | 255 |
| 6-9-2026 | 255 |
| 5-9-2026 | 255 |
| 4-9-2026 | 255 |
| 3-9-2026 | 255 |
| 2-9-2026 | 250 |
| 1-9-2026 | 250 |
