Rajma Curry with Brown Rice: புரோட்டீன் சத்து நிறைந்த ஆரோக்கிய உணவு – செய்முறை இதோ!

By Santhosh Raj Saravanan

|

Published on 16 Mar 2026, 5:35 PM

how to prepare rajma curry with brown rice protein meal recipe

உடல் எடையைக் (Weight loss)குறைக்க விரும்புபவர்களுக்கும், ஜிம் செல்பவர்களுக்கும் ராஜ்மா ஒரு மிகச்சிறந்த உணவாகும். 100 கிராம் ராஜ்மாவில் சுமார் 8 முதல் 9 கிராம் புரதச்சத்து உள்ளது. இதனை பிரவுன் ரைஸுடன் சேர்த்து உண்ணும்போது, அது ஒரு முழுமையான ஊட்டச்சத்து உணவாக (Superfood) மாறுகிறது.

தேவையான பொருட்கள்:

  • ராஜ்மா: 1 கப் (8 மணி நேரம் ஊறவைத்தது)
  • பிரவுன் ரைஸ்: 1.5 கப் (அரை மணி நேரம் ஊறவைத்தது)
  • வெங்காயம்: 2 (பொடியாக நறுக்கியது)
  • தக்காளி விழுது: 1 கப்
  • இஞ்சி பூண்டு விழுது: 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய்: 2
  • மசாலாக்கள்: மஞ்சள் தூள் (1/4 டீஸ்பூன்), மிளகாய் தூள் (1 டீஸ்பூன்), மல்லித் தூள் (1 டீஸ்பூன்), கரம் மசாலா (1/2 டீஸ்பூன்).
  • தாளிக்க: சீரகம், பெருங்காயம், பிரிஞ்சி இலை, எண்ணெய்/நெய்.
  • உப்பு: தேவையான அளவு

ராஜ்மா கறி செய்முறை:

  1. ராஜ்மாவை வேகவைத்தல்: நன்றாக ஊறவைத்த ராஜ்மாவை ஒரு பிரஷர் குக்கரில் போட்டு, 3 கப் தண்ணீர் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து 5 முதல் 6 விசில் வரும் வரை வேகவைக்கவும். ராஜ்மா மென்மையாக வெந்திருக்க வேண்டும்.
  2. மசாலா தயாரித்தல்: ஒரு கடாயில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடாக்கவும். சீரகம், பெருங்காயம் மற்றும் பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளிக்கவும்.
  3. வதக்குதல்: நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  4. தக்காளி மற்றும் பொடிகள்: தக்காளி விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். இப்போது மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
  5. ராஜ்மா சேர்த்தல்: வேகவைத்த ராஜ்மாவைத் தண்ணீருடன் மசாலாவில் சேர்க்கவும். கிரேவி தடிமனாக வர, சில ராஜ்மாக்களைக் கரண்டியால் மசித்து விடலாம்.
  6. கொதிக்க வைத்தல்: மிதமான தீயிக் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். இறுதியில் கரம் மசாலா மற்றும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

பிரவுன் ரைஸ் செய்முறை:

பிரவுன் ரைஸ் வேகுவதற்குச் சாதாரண அரிசியை விட அதிக நேரம் எடுக்கும்.

ADVERTISEMENT
  1. ஒரு கப் அரிசிக்கு 2.5 முதல் 3 கப் தண்ணீர் வைக்கவும்.
  2. குக்கரில் 3 முதல் 4 விசில் விட்டு, பின்னர் 5 நிமிடங்கள் சிம்மில் (Low flame) வைத்து இறக்கவும். இது அரிசியை மென்மையாகவும், உதிரியாகவும் மாற்றும்.

ஏன் இது ‘Protein Foundation’ மீல்?

  • முழுமையான புரதம் (Complete Protein): தானியங்களில் (அரிசி) இல்லாத சில அமினோ அமிலங்கள் பருப்பு வகைகளில் (ராஜ்மா) உள்ளன. இவை இரண்டையும் சேர்த்து உண்ணும்போது உடலுக்குத் தேவையான முழுமையான புரதம் கிடைக்கிறது.
  • குறைந்த கிளைசெமிக் குறியீடு (Low GI): பிரவுன் ரைஸ் மற்றும் ராஜ்மா ஆகிய இரண்டுமே ரத்தத்தில் சர்க்கரை அளவை மெதுவாகவே உயர்த்தும். எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்தது.
  • இதய ஆரோக்கியம்: ராஜ்மாவில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்க உதவுகிறது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Santhosh Raj Saravanan

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel