கோடைக்காலத்தில் குழந்தைகளின் சருமத்தை பாதுகாப்பது (Protect babies Skin) எப்படி என்பது தொடர்பாக சிலவற்றை தெரிந்துகொள்வோம்.
தற்போது கோடைக் காலம் நிலவி வரும் சூழலில் அதிகளவில் வெப்பநிலை பதிவாகி வருகிறது. நண்பகல் நேரத்தில் வெளியே செல்வதையே தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். கோடைக் காலம் என்பது குழந்தைகளுக்கு குறிப்பாக பச்சிளம் குழந்தைகளுக்கும் ஒரு கடினமான நேரம். ஏனெனில் குழந்தைகளின் சருமம் சென்சிட்டிவானது என்பதால் அதனால் வெப்பநிலையை தாங்க இயலாது.
ஆகவே, குழந்தைகளின் சருமத்தை வெப்பத்தில் இருந்து காக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் குழந்தைகளின் சருமத்தில் கொப்புளம், தடிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. கோடையில் உங்கள் குழந்தையின் (Summer baby Skin Care) சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சில சருமப் பராமரிப்புக் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
மென்மையான, காற்றோட்டமான ஆடைகளை தேர்ந்தெடுக்கவும்
பருத்தி மற்றும் லினன் போன்ற மென்மையான துணிகளால் குழந்தை உடலுக்குக் காற்றோட்டத்தை உறுதி செய்ய முடியும். குழந்தை தூங்கும்போது தடிமனான ஆடைகளை அணிவிப்பதை (Choose soft breathable clothing) தவிர்க்க வேண்டும். வெப்பமான இரவுகளில் மென்மையான ஆடைகளை அணிவிப்பது குழந்தைக்கு அதிக வசதியாக இருக்கும். வெளியே செல்லும்போது அதிக வெப்பத்தை உறிஞ்சுவதைத் தவிர்க்க, சிவப்பு, இண்டிகோ மற்றும் ஆலிவ் போன்ற அடர் நிற ஆடைகளை அணிவதை உறுதிப்படுத்த வேண்டும்.குறிப்பாக கருப்பு ஆடை அணிவதை தவிர்த்துவிட வேண்டும்.
இயற்கை பொருட்களை பயன்படுத்துங்கள்
கோடையில் குழந்தைகளுக்கு மணிக்கட்டு, கழுத்து மற்றும் முழங்கால்களுக்குப் பின்னால் உள்ள மடிப்புகளில் தடிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, இந்தப் பகுதிகளை (Use natural products for baby) எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இயற்கை மூலப்பொருட்களைக் கொண்ட பேபி பவுடர் வியர்வையை உறிஞ்சி சருமத்தை உலர வைக்க உதவும். உங்கள் குழந்தைக்கு அரிப்பு, சிவத்தல் அல்லது வீக்கமாக இருந்தால், கேலமைன் லோஷனைப் பூசலாம்.
குளிக்க வைக்க வேண்டும்
குழந்தையின் உடலில் உள்ள வியர்வையை நீக்க அவ்வப்போது ஈரமான துணியால் துடைப்பது சிறந்த வழியாகும். சீரான இடைவெளியில் ஆடைகளையும் டயப்பர்களையும் மாற்றுவது (baby both in summer) அவர்கள் புத்துணர்ச்சியுடன் உணரவும், டயப்பர் தடிப்புகளைத் தவிர்க்கவும் உதவுகிறது. குழந்தையைக் குளிப்பாட்ட வெதுவெதுப்பான நீரையே பயன்படுத்த வேண்டும். குழந்தை பாயில் விளையாடிக் கொண்டிருந்தால், டயப்பர்களைப் பயன்படுத்த வேண்டாம். பாயின் மீது ஒரு பருத்தித் துணியை விரிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்
மாய்ஸ்சரைசர்
குழந்தையைக் குளிப்பாட்டிய பிறகு மாய்ஸ்சரைசர் (baby Moisturizing) தடவுவது சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும். தோல் தடிப்புகள் மற்றும் வறட்சியைத் தவிர்க்க, கோடை காலத்தில் லோஷனையும், குளிர்காலத்தில் க்ரீமையும் தடவ வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்ற மாய்ஸ்சரைசர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கவும்.
ரசாயனங்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்
துணி துவைக்கும் சோப்பு மற்றும் திரவங்களில் உள்ள (avoid chemicals) கடுமையான ரசாயனங்கள் குழந்தையின் சருமத்தை எரிச்சலூட்டக்கூடும். துவைத்த பிறகு துணிகளில் அது ஒட்டாத அளவுக்கு மென்மையான துணி சோப்புகளை மட்டுமே பயன்படுத்துங்கள். மணம் இல்லாத மற்றும் சருமத்திற்கு உகந்த பொருட்களைக் கொண்ட லிக்விட்கள் ஒரு நல்ல தேர்வாகும்.
