சுவையான புதினா – தயிர் சட்னி செய்வது எப்படி? இதோ ரெசிபி

Published On:

| By Santhosh Raj Saravanan

How to make Mint Curd Chutney Recipe Here

கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க புதினா – தயிர் சட்னி (Mint Curd Chutney) செய்து சாப்பிடலாம்.

கோடைக்காலத்தில் காரமான உணவுகளைத் தவிர்த்துவிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். உடலுக்குக் குளிர்ச்சி தரும் மற்றும் எளிதில் செரிக்கும் உணவுகளையே சாப்பிட வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பாலும் காலையிலும் இரவிலும் இட்லி, தோசையே உணவாக பரிமாறப்படுகிறது. அதற்கு தேங்காய், கடலை, தக்காளி சட்னியே சாப்பிட்டு சலித்துவிட்டதா?. புதிதாக ஒரு சட்னியை நாம் முயற்சி செய்து பார்ப்போம்.  புதினா – தயிர் சட்னி என்பது சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், உடலைக் குளிர்விக்கவும் கோடை வெப்பத்தைத் தணிக்கவும் உதவுகிறது.

ADVERTISEMENT
சட்னி செய்யத் தேவையான பொருட்கள்
  • புதினா இலைகள்
  • தயிர் (Benefits of yogurt)
  • எண்ணெய் – தேவையான அளவு
  • பூண்டு – 3 முதல் 5 வரை
  • பச்சை மிளகாய் – 2
  • இஞ்சி – சிறிதளவு
  • எலுமிச்சை  சாறு – தேவையான அளவு
சட்னி தயாரிப்பது எப்படி?

முதலில் புதினா இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை தண்டுகளிலிருந்து பிரித்து சுத்தமான தண்ணீரில் நன்றாகக் கழுவவும். பிறகு, ஒரு பாத்திரத்தில் தயிரை எடுத்து அது மென்மையாகவும் வழவழப்பாகவும் ஆகும் வரை நன்றாகக் கலக்கவும். தயிர் எவ்வளவு நன்றாகக் கலக்கப்படுகிறதோ, சட்னி அவ்வளவு சுவையாக இருக்கும். பிறகு  ஒரு மிக்ஸி ஜாரில் (How to make chutney) புதினா இலைகள், இரண்டு பச்சை மிளகாய்,  4- 5 பூண்டுப் பற்கள் மற்றும் ஒரு சிறிய துண்டு இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரைக்கவும். இந்தக் கலவையை கடைந்த தயிருடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

பிறகு, சுவைக்கு ஏற்ப போதுமான உப்பு, சிறிதளவு எலுமிச்சை சாறு (Benefits of lemon juice) சேர்க்க வேண்டும். பிறகு வழக்கம் போல தாளித்தால் சுவையான புதினா – தயிர் சட்னி ரெடி. இதனை இட்லி, தோசைக்கு பரிமாறலாம். இந்த சட்னியின் சிறப்பு என்னவென்றால், இதைச் செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது. வீட்டில் கிடைக்கும் சில எளிய பொருட்களைக் கொண்டு, இதை ஒரு சில நிமிடங்களிலேயே தயாரித்துவிடலாம்.

ADVERTISEMENT
புதினா சட்னி நன்மைகள்

இந்த புதினா-தயிர் சட்னி சுவையானது மட்டுமல்ல, உடல் நலத்திற்கும் (Benefits of Mint Chutney) மிகவும் நல்லது. புதினாவின் இயற்கையான பண்புகள் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகின்றன. தயிர் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இஞ்சியும் பூண்டும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, செரிமான மண்டலத்தை வலுப்படுத்துகின்றன. எனவே, கோடைக்காலத்தில் இந்த சட்னியை அடிக்கடி உட்கொள்வது உடல் நலத்திற்கு நல்லது.

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share