சிக்கன், மட்டன், மீனில் உள்ள சத்துக்கள் : மூன்றில் எது அதிக நன்மை தருகிறது? – முழு விவரம்!

Published On:

| By Santhosh Raj Saravanan

Chicken Mutton and Fish Nutrients and Which is Most Health Beneficial

கோழி இறைச்சி (Chicken), ஆட்டிறைச்சி, மீன் ஆகியவற்றில் சிறந்தது எது, அவற்றில் உள்ள சத்துக்கள் குறித்துப் பார்க்கலாம்.

நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு சரியான உணவுமுறை அவசியம். உணவில் புரதம், வைட்டமின் சி, வைட்டமின் டி, நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருந்தால், அது பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக தசை வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்டவற்றுக்கு புரதச் சத்து மிகவும் அவசியமானதாகும். அசைவ உணவுப் பிரியர்கள் முட்டை, மீன், கோழி மற்றும் ஆட்டிறைச்சி ஆகியவற்றிலிருந்து தங்கள் புரதத்தைப் பெறலாம்.

ADVERTISEMENT

தமிழ்நாடு உள்பட இந்தியாவில் சிக்கன், மீன், மட்டன், முட்டை ஆகியவையே அதிகமாக விரும்பிச் சாப்பிடக்கூடிய உணவுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. அசைவ உணவுகளில் எதில் அதிகமான புரதச் சத்துக்கள் (Protein supplements) உள்ளன. எதனை அடிக்கடி சாப்பிடலாம், சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

100 கிராம் சிக்கனில் சுமார் 27 முதல் 31 கிராம் புரதம் உள்ளது. சிக்கன் சாப்பிடுவது தசைகளை வலுப்படுத்துகிறது. சிக்கனில் உயர்தரமான கொழுப்பற்ற புரதம் (Chicken meat benefits) உள்ளது. கொழுப்பு குறைவாக இருப்பதால், அது தீங்கு விளைவிப்பதில்லை. தோல் நீக்கப்பட்ட சிக்கனில் ஆட்டிறைச்சி மற்றும் மீனை விட குறைவான கொழுப்பு உள்ளது. சிக்கனில் ஆரோக்கியமற்ற கொழுப்போ அல்லது அதிக கலோரிகளோ இல்லாததால் அதைச் சாப்பிடுவது உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சிக்கனில் சாப்பிடுவது நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்த உணர்வைத் தரும்.

ADVERTISEMENT
மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

மீனில் புரதச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக மீனில் அதன் வகையைப் பொறுத்து 20 முதல் 25 கிராம் புரதம் உள்ளது. மீன் இதயம் மற்றும் கண்களுக்கு (Benefits of eating fish) மிகவும் ஆரோக்கியமானது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மீன் மூளை ஆரோக்கியத்திற்கும் உகந்தது. ஒமேகா-3, மூளையின் செயல்பாட்டைப் பராமரிக்க உதவுகிறது. மேலும், இது எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. சிலர் கோழி அல்லது ஆட்டிறைச்சியை விட மீன் உணவு எளிதில் செரிமானம் ஆவதாக உணர்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மட்டன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

100 கிராம் மட்டனில் சுமார் 20 முதல் 25 கிராம் புரதம் கிடைக்கிறது. மட்டனில் இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி12 நிறைந்துள்ளன. இவை உடல் பலவீனத்தை (Benefits of eating mutton) எதிர்த்துப் போராட உதவுகின்றன. இது உடலுக்கு ஆற்றலையும் அத்தியாவசிய தாதுக்களையும் வழங்குகிறது. இருப்பினும், மீன் மற்றும் சிக்கனை விட மட்டனில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் மிக அதிகமாக உள்ளது, எனவே இதை குறைந்த அளவிலேயே உட்கொள்வது சிறந்தது. இதயப் பிரச்சனைகள் அல்லது கொழுப்பு கல்லீரல் உள்ளவர்கள் குறைவாக எடுத்துக்கொள்ளவும்.

ADVERTISEMENT
சிக்கன், மட்டன், மீன் : எது சிறந்தது?

உடல் தசைகள் வலுப்பெற மற்றும் அதிக புரதச் சத்துக்கு சிக்கன் சிறந்த தேர்வாக இருக்கலாம். இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு மீன் நல்லது. கொழுப்பு நிறைந்த மீன்கள், குறிப்பாக சால்மன், மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்றவை இதயம் மற்றும் மூளைக்கு ஆரோக்கியமானவை. இரும்புச்சத்து (Iron content) மற்றும் பிற ஊட்டச்சத்துக் குறைபாடுகளுக்கு மட்டன் ஒரு நல்ல தேர்வாகக் கருதப்படுகிறது. ஆனால், மட்டனை மிதமான அளவே சாப்பிட வேண்டும். ஆனாலும்,உங்களுக்கு ஏதேனும் உடல்நலக்குறைபாடுகள் இருந்தால் மருத்துவரின் பரிந்துரைப்படி உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share