கோடைக் கால கருமையை நீக்கி சருமம் பளபளப்பாக மாற வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய பேஸ் பேக்கை (Facepack) முயற்சி செய்து பார்க்கலாம்.
தற்போது நாம் கோடைக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம். எனினும், வெயிலின் தாக்கம் என்பது இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும். அதன்பிறகே பருவமழைக் காலம் தொடங்கும்.இப்போது கடுமையான வெயில், வியர்வை மற்றும் தூசி காரணமாக, முகம் பொலிவிழந்து பொலிவிழந்து காணப்படுகிறது. சருமம் கருமையாதல் (Dark skin), எண்ணெய் பசை சருமம் மற்றும் முகப்பருக்கள் போன்ற பிரச்சனைகளையும் மக்கள் சந்திக்கிறார்கள். இதனை சரிசெய்ய பலரும் விலை உயர்ந்த அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால், நம் வீட்டில் உள்ள எளிய பொருட்களை மட்டும் வைத்து சருமத்தை (summer beauty tips) பொலிவூட்டலாம்.
தயிர், கடலை மாவு ஃபேஸ் பேக்
நமது சருமத்திற்கு குளிர்ச்சியும் ஈரப்பதமும் தேவைப்படுகிறது. இதற்கு தயிர், கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றால் செய்யப்பட்ட ஃபேஸ் பேக் மிகவும் நன்மை பயக்கும். ஒரு கிண்ணத்தில் சிறிதளவு கடலை மாவு, தயிர் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பசை போல கலக்கவும். இதை உங்கள் முகத்தில் (Curd and besan face pack) 15 நிமிடங்கள் தடவி, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இது உங்கள் சருமத்தை சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடனும் உணர வைக்கும்.
சருமத்திற்கு நன்மையளிக்கும் வெள்ளரிக்காய், கற்றாழை
வறண்ட சருமத்திற்கு வெள்ளரிக் காயும் கற்றாழையும் (Cucumber and aloevera beneficial) மிகவும் நல்லது. வெள்ளரிக்காய் சாறு முகத்தைக் குளிர்விப்பதுடன், சருமம் கருமையாவதைக் குறைக்கவும் உதவும். கற்றாழை ஜெல் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவுவதாகக் கருதப்படுகிறது. இரவில் உறங்கச் செல்வதற்கு முன் கற்றாழை ஜெல்லைப் பூசி காலையில் எழுந்து முகம் கழுவினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
எலுமிச்சை + தேன்
எலுமிச்சை மற்றும் தேன் பேஸ் பேக்கும் (Lemon + honey facepack) சருமத்திற்கு நன்மை அளிக்கும். எலுமிச்சை சாறு, தேன் இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவலாம். இது சருமத்தை பளபளப்பாக்குகிறது. இருப்பினும், சிலருக்கு சென்சிட்டிவான சருமம் இருப்பதால், எலுமிச்சையை நேரடியாக முகத்தில் தடவுவதற்கு முன்பு, சிறு பகுதிகளில் பரிசோதித்துப் பார்த்துக்கொள்ளலாம்.
கோதுமை, கற்றாழை, ரோஸ்வாட்டர்
கோதுமை மாவு, கற்றாழை, ரோஸ் வாட்டர் ஆகியவற்றை (Wheat aloe vera rosewater) கலந்து பசை போல மாற்றிக்கொள்ள வேண்டும். இதனை உங்கள் முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டுவிடவும். அதன் பிறகு, உங்கள் முகத்தைக் குளிர்ந்த நீரால் நன்றாகக் கழுவவும். சென்சிட்டிவ் சருமம் முதல் வறண்ட சருமம் வரை அனைத்து வகையான சருமம் உள்ளவர்களும் இதை எளிதாகப் பயன்படுத்தலாம். இது முகத்தில் உள்ள தூசி மற்றும் அழுக்கு அடுக்கை மிகவும் துல்லியமாக அகற்றி, உங்கள் முகத்தை முற்றிலும் சுத்தமாக்குகிறது.
தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்
இயற்கையான ஃபேஸ் பேக் மட்டும் பயன்படுத்துவது போதாது. கோடை காலத்தில் நிறைய தண்ணீர் (Drink more water) குடிப்பதும், சூரியனிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதும் அவசியமாகும். வெளியில் செல்லும்போது முகத்தை மூடிக்கொள்வதும், சன்ஸ்கிரீன் பூசுவதும் உங்கள் சருமத்தைப் பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவும். அதிகமாக தண்ணீர் குடிப்பது நமது சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவிபுரிகிறது.
