இனி எப்போதுமே 20 வயசுதான்! சைடு எஃபெக்ட்ஸ் இல்லாம ‘ரெட்டினால்’ (Retinol) பயன்படுத்தும் 4 கோல்டன் ரூல்ஸ்!

Published On:

| By Santhosh Raj Saravanan

how to introduce retinol without irritation skin rules

“முகத்துல இருக்குற சுருக்கங்கள், கரும்புள்ளிகள், முகப்பருக்கள் எல்லாம் மறைஞ்சு முகம் அப்படியே ‘கிளாஸ் ஸ்கின்’ (Glass Skin) மாதிரி ஜொலிக்கணுமா?” அப்போ உங்களது ஸ்கின்கேர் ரூட்டினில் இருக்க வேண்டிய ஒரே சூப்பர் ஹீரோ ‘ரெட்டினால்’ (Retinol) தான். உலகெங்கிலும் உள்ள பியூட்டி பிளாக்கர்ஸ் மற்றும் தோல் மருத்துவர்களின் ஆல்-டைம் ஃபேவரட் பொருள் இது.

ஆனால், இந்த சூப்பர் ஹீரோவிற்குப் பின்னால் ஒரு பெரிய ஆபத்தும் ஒளிந்திருக்கிறது. ரெட்டினாலை சரியான பக்குவத்தில் பயன்படுத்தத் தெரியவில்லை என்றால், முகம் சிவந்து, செதில் செதிலாக உரிந்து, எரிச்சல் ஏற்பட்டு ரெட்டினால் பர்ன்‘ (Retinol Burn) ஆகிவிடும். உங்கள் சருமத்திற்கு எந்த ஒரு எரிச்சலும் (Irritation) தராமல், ரெட்டினாலை முதன்முதலில் எப்படிப் பக்குவமாக அறிமுகப்படுத்துவது என்று இந்த பதிவில் பார்ப்போம்!

ADVERTISEMENT
ரெட்டினால் (Retinol) என்றால் என்ன?

இது வைட்டமின் ஏ (Vitamin A) விலிருந்து பெறப்படும் ஒரு மூலக்கூறு ஆகும். இது சருமத்தின் கொலாஜன் (Collagen) உற்பத்தியை அசுர வேகத்தில் அதிகரித்து, இறந்த செல்களை நீக்கி, புதிய ஆரோக்கியமான செல்களை உருவாக்க உதவுகிறது. சுருக்கமாகச் சொன்னால், இது உங்கள் சருமத்தின் வயதாகும் செயல்முறையை அப்படியே தலைகீழாக மாற்றி இளமையைத் தக்கவைக்கும் (Anti-aging).

எரிச்சல் இல்லாமல் ரெட்டினாலைத் தொடங்குவதற்கான 4 விதிகள்

விதி 1: ‘லோ அண்ட் ஸ்லோ’ பக்குவம் (Start Low and Slow) ஆரம்பத்திலேயே வீரியம் அதிகமான ரெட்டினால் சீரம்களை வாங்கக் கூடாது. மிகக் குறைந்த செறிவூட்டல் கொண்ட 0.1% அல்லது 0.2% ரெட்டினாலில் ஆரம்பியுங்கள்.

ADVERTISEMENT
  • முதல் 2 வாரங்கள்: வாரத்திற்கு ஒரே ஒரு முறை (1 Night a week) மட்டும் இரவு நேரத்தில் பயன்படுத்துங்கள்.
  • அடுத்த 2 வாரங்கள்: சருமத்திற்குப் பழகிய பின், வாரத்திற்கு இரண்டு முறை (2 Nights a week) என மாற்றுங்கள். சருமம் முற்றிலும் பழகிய பிறகே நாட்களை அதிகரிக்க வேண்டும்.

விதி 2: முற்றிலும் உலர்ந்த முகம் (Apply ONLY on Dry Skin) நாம் முன்பு பார்த்த ஹைலூரோனிக் அமிலம் போல இதனை ஈரமான முகத்தில் அப்ளை செய்யவே கூடாது! முகம் கழுவிய பிறகு டவலால் நன்றாகத் துடைத்து, 10 நிமிடங்கள் முகம் முழுமையாகக் காயும் வரை காத்திருக்க வேண்டும். சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும் போது ரெட்டினால் போட்டால், அது சருமத்தின் ஆழமான அடுக்குகளுக்குள் மிக வேகமாக ஊடுருவி கடுமையான எரிச்சலையும், சிவப்பையும் உண்டாக்கிவிடும்.

விதி 3: பட்டாணி அளவு மட்டுமே! (The Pea-Sized Rule) “நிறைய சீரம் அப்ளை பண்ணா சீக்கிரம் முகம் பளபளக்கும்” என்று நினைப்பது பேராபத்து. உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதி முழுவதற்கும் சேர்த்து ஒரே ஒரு சிறிய பட்டாணி அளவு (Pea-sized amount) ரெட்டினால் மட்டுமே போதுமானது. அளவுக்கு அதிகமாய் வைத்தால் முகம் நிச்சயம் உரிந்துவிடும்.

ADVERTISEMENT

விதி 4: சாண்ட்விச் தொழில்நுட்பம் (The Sandwich Method) உங்களது சருமம் மிகவும் சென்சிட்டிவ் (Sensitive skin) ஆனது என்றால், இந்த முறையைப் பின்பற்றுங்கள். இது சரும எரிச்சலை 90% குறைக்கும்.

  1. முகம் கழுவி காய்ந்ததும், முதலில் ஒரு லேயர் மாய்ஸ்சரைசர் அப்ளை செய்யுங்கள்.
  2. அது காய்ந்ததும், அதன் மேல் ரெட்டினால் அப்ளை செய்யுங்கள்.
  3. மீண்டும் அதன் மேல் மற்றொரு லேயர் மாய்ஸ்சரைசர் அப்ளை செய்து லாக் செய்யுங்கள். இரண்டு மாய்ஸ்சரைசர்களுக்கு நடுவில் ரெட்டினாலை வைப்பதால் தான் இதற்கு ‘சாண்ட்விச் முறை’ என்று பெயர்.
பியூட்டி எக்ஸ்பர்ட்டின் அதிரடி எச்சரிக்கை (Strict Warning):
  • இரவில் மட்டும் போதும்: ரெட்டினாலை எப்போதும் இரவு நேரத்தில் (Night routine) மட்டுமே பயன்படுத்த வேண்டும். சூரிய ஒளியில் இது நிலைத்திருக்காது.
  • சன்ஸ்கிரீன் கட்டாயம்: ரெட்டினால் பயன்படுத்தும் போது உங்கள் சருமம் புதிய செல்களை உருவாக்குவதால், அது சூரிய ஒளியால் மிக எளிதாகப் பாதிப்படையும். எனவே, மறுநாள் காலையில் டூ-பிங்கர் ரூல் படி சன்ஸ்கிரீன் அணிய வேண்டியது கட்டாயத்திலும் கட்டாயம்!
  • கூட்டணி வேண்டாம்: நீங்கள் ரெட்டினால் பயன்படுத்தும் அதே இரவில் வைட்டமின் சி, AHA, BHA போன்ற மற்ற வீரியமிக்க சீரம்களையோ அல்லது ஸ்க்ரப்களையோ முகத்தில் அப்ளை செய்யக் கூடாது.
Photo of author
Santhosh Raj Saravanan

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share