கிச்சன் கீர்த்தனா: தேன், மா, இஞ்சி ஸ்பிரெட்

Published On:

| By Selvam

Honey mango ginger spread

குட்டீஸ் விரும்பும் ஸ்பெஷல் டிஷ் ஸ்பிரெட். சாண்ட்விச்சுக்கு ஸ்பிரெட் ஆகவோ அல்லது சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக்கொள்ளவோ பயன்படுத்தும் இந்த  தேன், மா, இஞ்சி ஸ்பிரெட் அனைவருக்கும் ஏற்றது… ஆரோக்கியமானது.

என்ன தேவை?

தேன் – 2-3 டேபிள்ஸ்பூன்
துருவிய மாங்காய் – 5 டேபிள்ஸ்பூன்
துருவிய இஞ்சி – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது?

தோல் நீக்கி துருவிய மாங்காய், தோல் நீக்கி துருவிய இஞ்சி, உப்பு ஆகியவற்றுடன் தேனை கலந்தால் தேன், மா, இஞ்சி ஸ்பிரெட் ரெடி. இதை சாண்ட்விச்சுக்கு ஸ்பிரெட் ஆகவோ அல்லது சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக்கொள்ளவோ பயன்படுத்தலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: ஃப்ரூட் பர்ஃபைட்!

கிச்சன் கீர்த்தனா: சேவரி போஹா, இனிப்பு போஹா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share