தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் காரணமாக மக்கள் அசவுகரியத்தை எதிர்கொள்கின்றனர்.
இந்தநிலையில் 10 மாவட்டங்களின் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.
அதில், “நாளை ஜூன் 9ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மற்றும் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் ஜூன் 10ஆம் தேதி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடம் கூடிய மழை பெய்யும்.
ஜூன் 11ஆம் தேதி, நீலகிரி, கோவை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.
வெப்பநிலையைப் பொறுத்தவரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரபதமும் இருக்கும் நிலையில் வட கடலோர தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்சமாக 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகும்” என்று கூறியுள்ளது
