இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் (HCL Tech), சென்னையில் உள்ள தனது கிளைக்குத் தேவையான திறமையான இளைஞர்களைத் தற்போது தேடி வருகிறது. குறிப்பாக, உலகளாவிய வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களின் சந்தேகங்களைத் தீர்க்கும் ‘வாய்ஸ் ப்ராசஸ்’ பணிக்காக இந்த ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.
பணியிட விவரங்கள்
பணியிடப் பெயர்: இன்டர்நேஷனல் வாய்ஸ் ப்ராசஸ் (International Voice Process).
கல்வித்தகுதி: நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) முடித்திருந்தால் போதும். இப்போது காலேஜ் முடித்த ஃப்ரெஷர்ஸ் (Freshers) முதல் அனுபவம் உள்ளவர்கள் வரை அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
முக்கியத் தகுதி: உங்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும் (English Communication Skills), மற்றவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டியது மிக மிகக் கட்டாயம். இது ‘இன்டர்நேஷனல்’ ப்ராசஸ் என்பதால், உங்களுக்கு ‘ரொட்டேஷனல் ஷிப்ட்’ (Rotational Shifts) முறையில் வேலை இருக்கும். அதாவது இரவு நேரங்களிலும் வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டும் பாஸ்.
பணியிடம்: சென்னை (குறிப்பாக சோழிங்கநல்லூர் போன்ற முக்கிய ஐடி ஹப்களில் பணிகள் அமைய வாய்ப்புள்ளது).
ஹெச்.சி.எல் நிறுவனத்தைப் பொறுத்தவரை, தகுதியான நபர்களுக்குத் துறைசார்ந்த சிறந்த ஊதியம் (Industry Standard Salary) வழங்கப்படும். இதுதவிர, இரவு நேர ஷிப்டுகளில் வேலை செய்யும் போது கூடுதல் அலவன்ஸ்கள் (Night Shift Allowance) மற்றும் இன்சென்டிவ்கள் (Incentives) கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும், பெண் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருதி பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து வசதியும் (Pick and Drop) கம்பெனி தரப்பிலேயே செய்து தரப்படும்!
இது வாய்ஸ் ப்ராசஸ் வேலை என்பதால், நீங்க எவ்வளவு தெளிவா இங்கிலீஷ் பேசுறீங்கங்கிறதுதான் மேட்டர். இன்டர்வியூ போறதுக்கு முன்னாடி கண்ணாடியில பார்த்துப் பேசிப் பயிற்சி எடுங்க பாஸ்! உங்ககிட்ட டிகிரி மார்க் கம்மியா இருந்தாக் கூட கவலைப்படாதீங்க. நீங்க பேசுற ஸ்டைலும், உங்க தன்னம்பிக்கையும்தான் ‘ரிசல்ட்’ பாசிட்டிவா வர உதவும்.
உங்களுடைய ரெஸ்யூமை (Resume) ஒருமுறைக்கு ரெண்டு முறை செக் பண்ணிக்கோங்க. அதுல உங்க கம்யூனிகேஷன் திறமை மற்றும் எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டிஸை ஹைலைட் பண்ணிக் காட்டுங்க. 10ஆவது, 12ஆவது மற்றும் டிகிரி சர்டிபிகேட்களைத் தயாரா வச்சுக்கோங்க. இன்டர்வியூ தேர்வான உடனே டாக்குமெண்ட் வெரிஃபிகேஷன் மின்னல் வேகத்துல நடக்கும்.
எப்படி விண்ணப்பிப்பது?
விருப்பமும் தகுதியும் உள்ள தம்பி, தங்கச்சிகள் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள ‘Careers’ பக்கத்திற்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அல்லது முன்னணி வேலைவாய்ப்புத் தளங்கள் (Naukri, Indeed) வழியாகவும் விண்ணப்பங்களைத் தட்டி விடலாம்!
சென்னையிலேயே ஒரு பெரிய எம்என்சி (MNC) கம்பெனியில கரியரைத் தொடங்க இது ஒரு அருமையான சான்ஸ். இங்க கிடைக்குற எக்ஸ்பீரியன்ஸ் நாளைக்கு உங்களை வேற லெவல்ல கொண்டு போகும்.
