நீட் மார்க் கம்மியா வரும்னு கவலையா? இதோ தொழிலாளர் வர்க்கத்துக்காக ஒரு மெகா ‘ஜாக்பாட்’!

Published On:

| By Santhosh Raj Saravanan

esic ip ward quota mbbs bds admissionv2026 application details

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இஎஸ்ஐ கார்ப்பரேஷன் (ESIC), 2026-27 கல்வியாண்டிற்கான ‘இன்சூர்டு பெர்சன்ஸ் வார்டு’ (IP Ward) ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் (BDS) படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மே 9, 2026 முதல் தொடங்கி மாஸாக நடந்து வருகிறது.

யார் விண்ணப்பிக்கலாம்?

இஎஸ்ஐ திட்டத்தில் உறுப்பினராக உள்ள தொழிலாளர்களின் பிள்ளைகள் மட்டுமே இதற்குத் தகுதியானவர்கள். சம்பந்தப்பட்ட பெற்றோர் செப்டம்பர் 30, 2025 நிலவரப்படி, குறைந்தது 3 ஆண்டுகள் இஎஸ்ஐ திட்டத்தில் தொடர்ந்து பங்களிப்பு செய்திருக்க வேண்டியது கட்டாயம். இந்தியா முழுவதும் மொத்தம் 11 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் தமிழகத்தில் சென்னை (கே.கே. நகர்) மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள கல்லூரிகளும் அடங்கும்.

ADVERTISEMENT

மொத்தம் உள்ள இடங்களில் 15% அகில இந்திய ஒதுக்கீடு போக, மீதமுள்ள இடங்களில் கணிசமான பகுதி இந்த ‘IP Ward’ ஒதுக்கீட்டின் கீழ் வரும். வழக்கம் போல நீட் 2026 (NEET) தேர்வில் நீங்கள் வாங்கும் மதிப்பெண் மற்றும் ரேங்க் அடிப்படையிலேயே அட்மிஷன் நடக்கும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 28, 2026

ADVERTISEMENT

முதலில் நீங்கள் ‘Ward of IP’ என்ற சான்றிதழுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதை இஎஸ்ஐ பிராந்திய அலுவலகங்கள் சரிபார்த்து உங்களுக்கு வழங்கும்.

பொதுவான கவுன்சிலிங்கை விட, இஎஸ்ஐ வார்டு ஒதுக்கீட்டுல கட்-ஆப் மதிப்பெண் கணிசமாக குறையும் பாஸ். அதனால கம்மி மார்க் எடுத்தாலும் ‘ஹோப்’ விடாதீங்க! இஎஸ்ஐ கல்லூரிகளில் படிக்கும்போது நீங்க அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகரான மிகக் குறைந்த கட்டணத்தையே செலுத்துவீர்கள்.

ADVERTISEMENT

உங்க பெற்றோரோட இஎஸ்ஐ கார்டு (E-Pehchan Card), அவங்களோட சம்பளப் பட்டியல் (Pay Slip), மற்றும் உங்களோட நீட் ஹால் டிக்கெட் இதையெல்லாம் ஸ்கேன் பண்ணி ரெடியா வச்சுக்கோங்க. மே 28 வரை டைம் இருக்குன்னு அசால்ட்டா இருக்காதீங்க. கடைசி நேரத்துல ‘Ward of IP’ சர்டிபிகேட் வாங்குறதுல ஏதாச்சும் சிக்கல் வரலாம். ‘மிஸ் பண்ணிடாதீங்க பாஸ்!’, இன்னைக்கே வேலையை ஆரம்பிங்க.

எப்படி விண்ணப்பிப்பது?

தகுதியுள்ள மாணவர்கள் www.esic.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.

ஒரு தொழிலாளியோட புள்ளை டாக்டராகக் கூடாதுன்னு எந்த விதியும் இல்லை பாஸ். அரசாங்கம் கொடுத்திருக்கிற இந்த வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கிட்டா, உங்க வெள்ளை அங்கி கனவு கண்டிப்பா நனவாகும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share