டிசிஎஸ் (TCS) நிறுவனத்துல ‘மாஸ்’ வேலை! பெங்களூருவில் ‘சேல்ஸ்போர்ஸ் டெவலப்பர்’ பணி

Published On:

| By Santhosh Raj Saravanan

tcs bengaluru salesforce developer recruitment 2026 details

டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம், பெங்களூருவில் (TCS Bengaluru) உள்ள தனது மையத்தில் பணிபுரியத் தகுதியான அனுபவம் வாய்ந்த மென்பொருள் வல்லுநர்களைத் தற்போது தேடி வருகிறது. குறிப்பாக, கிளவுட் கம்ப்யூட்டிங் துறையில் கலக்கிக் கொண்டிருக்கும் சேல்ஸ்போர்ஸ் தளத்தில் கைதேர்ந்தவர்களுக்கு இது ஒரு அருமையான ஜாக்க்பாட் வாய்ப்பு.

பணியிட விவரங்கள்

பணியிடப் பெயர்: சேல்ஸ்போர்ஸ் டெவலப்பர் (Salesforce Developer).

ADVERTISEMENT

பணியிடம்: பெங்களூரு, கர்நாடகா.

குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 12 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

முக்கியத் திறன்கள் (Core Skills):

  • சேல்ஸ்போர்ஸ் லைட்னிங் (Salesforce Lightning) மற்றும் அபெக்ஸ் (Apex) கோடிங்கில் பலமான அறிவு இருக்க வேண்டும்.
  • விஷுவல்போர்ஸ் (Visualforce), லைட்னிங் வெப் காம்பொனென்ட்ஸ் (LWC) ஆகியவற்றில் வேலை பார்த்த அனுபவம் அவசியம்.
  • சேல்ஸ்போர்ஸ் ஏபிஐ (Salesforce APIs) மற்றும் இன்டகிரேஷன் (Integration) நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
  • சேல்ஸ்போர்ஸ் அப்ளிகேஷன்களை டிசைன் செய்தல், டெவலப் செய்தல் மற்றும் வெற்றிகரமாக இம்ப்ளிமென்ட் (Implementation) செய்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்.
வேலை என்ன? எப்படி இருக்கும்?

நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், டிசிஎஸ் நிறுவனத்தின் சர்வதேச வாடிக்கையாளர்களுக்குத் தேவையான சேல்ஸ்போர்ஸ் தீர்வுகளை (Salesforce Solutions) உருவாக்க வேண்டும். கஸ்டம் அப்ளிகேஷன்களை உருவாக்குவது, பிசினஸ் தேவைகளுக்கு ஏற்ப பிளாட்பார்மை மாற்றி அமைப்பது மற்றும் கோடிங்கில் உள்ள தவறுகளைக் கண்டறிந்து சரி செய்வது (Testing & Debugging) என உங்களுடைய வேலை செம ‘ஷார்ப்பா’ இருக்கும்.

ADVERTISEMENT

டிசிஎஸ் மாதிரி பெரிய கம்பெனிக்கு போகும்போது, உங்ககிட்ட ‘Salesforce Certified Platform Developer I’ அல்லது ‘II’ சர்டிபிகேட் இருந்தா, அது உங்க ரெஸ்யூமுக்கு ஒரு தனி கெத்தைக் கொடுக்கும். இப்போ இருக்குற ட்ரெண்ட்ல ‘Lightning Web Components’ (LWC) ரொம்ப முக்கியம். இன்டர்வியூ போறதுக்கு முன்னாடி அதுல ஒருமுறை நல்லா ‘Brush-up’ பண்ணிக்கோங்க.

வெறும் கோடிங் மட்டும் போதாது. சேல்ஸ்போர்ஸை எப்படி மத்த சிஸ்டம்கூட இணைக்கிறது (Integration) அப்படின்ற விபரங்களை இன்டர்வியூல தெளிவா சொன்னீங்கன்னா, வேலை உறுதி. பெங்களூருவுல டிராபிக் கொஞ்சம் அதிகம் தான், ஆனா ஐடி கரியர் வளரணும்னா அங்க இருக்குற நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் வேற எங்கயும் கிடைக்காது.

எப்படி விண்ணப்பிப்பது?

தகுதியும் விருப்பமும் உள்ள தம்பி, தங்கச்சிகள் டிசிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ‘TCS NextStep’ போர்டல் அல்லது அவர்களின் கரியர் பக்கத்திற்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். உங்களது அப்டேட் செய்யப்பட்ட ரெஸ்யூமை (Resume) மறக்காம அப்லோடு பண்ணுங்க!

ஒரு ஐடி ஊழியருக்கு டாட்டா குரூப்ல வேலை கிடைக்குறது ஒரு மெகா ஜாக்க்பாட். அங்க இருக்குற ஒர்க் கல்ச்சர் (Work Culture) மற்றும் ஸ்டெபிலிட்டி (Stability) உங்க கரியரை அடுத்த லெவலுக்குக் கொண்டு போகும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share