ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் ட்ரெய்லர்: ஸ்பெஷல் என்ன?

By Minnambalam

|

Published on 17 Nov 2023, 3:54 PM

harish kalyan parking movie trailer

தமிழ் சினிமாவில் தனக்கு ஏற்ற கதைகளை சரியாக தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

தற்போது இவரது நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் பார்க்கிங் என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் நடிகர்கள் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராமா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Passion studios நிறுவனம் மற்றும் Soliders Factory நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. சாம் சி.எஸ். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ADVERTISEMENT

சமீபத்தில் படத்தின் புரோமோ வீடியோ, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் ஆகியவை வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பார்க்கிங் படம் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் ரிலீஸ் தள்ளிப்போனது.

இந்நிலையில் இன்று (நவம்பர் 17) பார்க்கிங் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. வாடகை வீட்டில் வாழும் ஹீரோ புதிதாக கார் வாங்குகிறார். அந்த புது காரை வீட்டில் நிறுத்த இடமில்லாததால் ஹவுஸ் ஓனருடன் பிரச்சனை ஏற்படுகிறது. ஹீரோவின் பார்க்கிங் பிரச்சனை முடிவுக்கு வந்ததா? இல்லையா? என்பதே பார்க்கிங் படத்தின் ஒன் லைன்.

ADVERTISEMENT

வரும் டிசம்பர் 1-ஆம் தேதி பார்க்கிங் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அண்ணா பல்கலை தேர்வு கட்டணம் இந்த ஆண்டு உயர்த்தப்படாது: பொன்முடி

’நூலகம்’: விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த மூவ்!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel