தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கட்சி சார்பாக போட்டியிடுபவர்களின் பெயர்கள் அடங்கிய வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. அதில், கோவை வால்பாறை தனித்தொகுதி வேட்பாளராக கஸ்தூரி என்பவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர், நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது கணவர் வாசு எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவர். இருவரும் கலப்புத் திருமணம் என்பதாலேயே கஸ்தூரிக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பேசப்படுகிறது. ஆனால், கஸ்தூரி எஸ்.சி. இல்லை. எனவே, அவருக்கு இந்தத் தொகுதியை ஒதுக்கமுடியாது, அவரது குழந்தைகளுக்குத்தான் போட்டியிட உரிமை இருக்கிறது என்பதாக தற்போது சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இது தொடர்பான வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக-தனித்தொகுதி: வேட்பாளர் சர்ச்சை!
Published On:
| By Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
