துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிக வரித்துறை உதவி ஆணையர், தொழிலாளர் உதவி ஆணையர் உள்ளிட்ட உயர் பதவிகளில் 70 காலிப்பணியிடங்கள் உள்ளது. Group Exam date announcement
இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1 ஏ தேர்வுக்கான அறிவிப்பாணை இன்று (ஏப்ரல் 1) வெளியாகியுள்ளது.

அதன்படி, இன்று முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். தங்களது விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால் மே 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
ஜூன் 15-ஆம் தேதி முதல்நிலை தேர்வானது காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது. முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றுவர்களுக்கான முதன்மை தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Group Exam date announcement