ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஏப்ரல் 17) டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். governor rn ravi went to delhi
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாக உச்ச நீதிமன்றத்தில் அரசு சார்பில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் அமர்வு, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்த தமிழக ஆளுநரின் செயல் சட்ட விரோதமானது என தீர்ப்பளித்தது. ஆளுநருக்கும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்ற ஆளுநர், ஞாயிறு அன்று சென்னை திரும்புவார் என தகவல்கள் வருகின்றன.
டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி முக்கிய மத்திய அமைச்சர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. governor rn ravi went to delhi
