முதலீடு என்றாலே ஒரே ஒரு சொத்தை நம்புவது சரியான உத்தியாக இருக்காது என்பதை சமீபத்திய தரவுகள் மீண்டும் உணர்த்துகின்றன.
2026-ல் இதுவரை தங்கம் முதலீட்டாளர்களுக்கு சிறப்பான வருமானத்தை வழங்கியுள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளை கணக்கில் எடுத்துப் பார்த்தால் வெள்ளி, தங்கம் மற்றும் சில பங்குச் சந்தை குறியீடுகள் முன்னிலை வகிக்கின்றன.
2026-ல் தங்கம் முதலிடம்
ஆகஸ்ட் 31, 2026 வரையிலான தரவுகளின்படி, தங்கம் 13.7 சதவீத வருமானத்துடன் முதலிடத்தில் உள்ளது. ஸ்மால்-கேப் பங்குகள் 12.6 சதவீதமும், மிட்-கேப் பங்குகள் 5.7 சதவீதமும் வருமானம் அளித்துள்ளன.
குறுகிய கால கடன் முதலீடுகள் 3.5 சதவீதம், 10 ஆண்டு அரசு பத்திரங்கள் 1.5 சதவீதம் வழங்கியுள்ளன. மறுபுறம், வெள்ளி 0.9 சதவீத இழப்பையும், லார்ஜ்-கேப் பங்குகள் 7.9 சதவீத இழப்பையும் சந்தித்துள்ளன.
கடந்த பத்து ஆண்டுகளின் ஆண்டு சராசரி வருமானத்தைப் பார்க்கும்போது, விலைமதிப்புள்ள உலோகங்கள் முதலீட்டாளர்களை அதிகம் கவர்ந்துள்ளன.
வெள்ளி 18.2 சதவீத வருமானத்துடன் முதலிடத்திலும், தங்கம் 17.5 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
மிட்-கேப் பங்குகள் 15.4 சதவீத வருமானத்துடன் அடுத்த இடத்தைப் பிடித்துள்ளன.
பங்குகளுக்கும் நீண்டகாலத்தில் வாய்ப்பு
ஸ்மால்-கேப் பங்குகள் 12.4 சதவீதமும், லார்ஜ்-கேப் பங்குகள் 10.6 சதவீதமும் ஆண்டு சராசரி வருமானம் கொடுத்துள்ளன.
குறுகிய கால கடன் முதலீடுகள் 5.9 சதவீதமும், 10 ஆண்டு அரசு பத்திரங்கள் 5.8 சதவீதமும் வழங்கியுள்ளன.
இதனால் எந்த ஒரு முதலீட்டு வகையும் தொடர்ந்து முதலிடத்தில் இருக்காது என்பது தெளிவாகிறது.
முதலீட்டாளர்களின் இலக்கு, கால அளவு மற்றும் ரிஸ்க் ஏற்றுக்கொள்ளும் திறனுக்கு ஏற்ப தங்கம், பங்குகள், கடன் போன்றவற்றை கலந்து வைத்திருப்பது முக்கியம்.
