சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிற நிலையில், இன்று(அக்டோபர் 17)சவரனுக்கு மேலும் ரூ.160 உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.7,160-க்கும், ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.57,280-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.7,615-க்கும், ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.60,920-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்த வரையில் இன்று(அக்டோபர் 17) எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000 க்கும் விற்பனையாகி வருகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. புத்தாடைகள், பட்டாசுகள் போலவே சமீப ஆண்டுகளாக தீபாவளிக்கு தங்க நகைகள் வாங்குவதும் ஃபேஷனாகி வருகிறது. இந்நிலையில் தீபாவளிக்கு முன் தங்கம் விலை உயர்வது குறிப்பிடத் தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கண்கள் கட்டப்படாத புதிய நீதி தேவதை… கொட்டிக்கிடக்கும் குறியீடுகள்!