ஆட்டம் காட்டும் தங்கம் விலை நிலவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (ஜூலை 9) காலை ஒரு சவரன் தங்கம் ரூ.240 வரை குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ. 800 வரை அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை 3 முறை மாற்றி அமைக்கப்பட்டு ஒரு சவரன் ரூ.1,06,600க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை ஒரு சவரன் தங்கம் ரூ.240 வரை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு சவரனுக்கு ரூ.800 வரை உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

தற்போதைய தங்கம் விலை

சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 30 குறைந்து ரூ.13,220க்கு விற்பனையானது. ஒர சவரன் தங்கம் ரூ.240 குறைந்து ரூ. 1,05,760க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று பிற்பகலில் ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ.100 அதிகரித்து ரூ.13,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 800 அதிகரித்து ரூ.1,06,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

அதேபோல் இன்று காலை 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.30 குறைந்து ரூ.11,040க்கு விற்பனையானது. பிற்பகலில் ஒரு கிராம் மேலும் ரூ.40 குறைந்து ரூ.11,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போதைய வெள்ளி விலை

சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)

8-7-20261,06,000
7-7-20261,07,200
6-7-20261,08,480
5-7-20261,09,600
4-7-20261,09,600
3-7-20261,09,600
2-7-20261,08,400
1-7-20261,06,000
30-6-20261,05,600
29-6-20261,06,400

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

8-7-2026245
7-7-2026250
6-7-2026250
5-7-2026260
4-7-2026260
3-7-2026260
2-7-2026255
1-7-2026245
30-6-2026245
29-6-2026245
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share