டிஐஜி வருண் குமார் ஐபிஎஸ் மாற்றம்!

Published On:

| By Kavi

தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து உள்துறை செயலாளர் மணிவாசன் இன்று (ஜூலை 9) பிறப்பித்த உத்தரவில், ”சென்னை குற்றப்பிரிவு சிஐடி டிஐஜி வருண் குமார்,  ஈரோடு அதிரடிப்படை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.  ஈரோடு அதிரடிப்படை ஐஜி பதவி காலியாக உள்ளதால், அந்தப் பதவி டிஐஜி  பதவியாகத் தரம் குறைக்கப்பட்டு இவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

டிஐஜி அந்தஸ்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த விக்ரமன், சென்னை குற்றப்பிரிவு சிஐடி டிஐஜியாகவும், 

எஸ்பி அந்தஸ்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரகுபதி, தாம்பரம் மாநகரக் காவல், பள்ளிக்கரணை துணை ஆணையராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share