எங்களுக்கும் வாய்ப்புக் கொடுங்கள்: காடுவெட்டி குரு

Published On:

| By Balaji

திருக்கோவிலூரை அடுத்த செட்டித்தாங்கலில், நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாமக வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, ‘‘இத்தேர்தலில் நாங்கள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கமாட்டோம். ஏனெனில், எங்களிடம் பணமில்லை. ஆனால், நேர்மையான முறையில் தேர்தலைச் சந்திப்போம். தமிழகத்தில், கடந்த 50 ஆண்டுகாலமாக ஆட்சிசெய்த திமுக, அதிமுக கட்சிகளுக்கு ஒரு மாற்றாக பாமக-வுக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள். ஐந்தே ஐந்து ஆண்டுகாலம் மட்டும் வாய்ப்புக் கொடுங்கள். 50 ஆண்டுகளுக்கான நல்லாட்சியை நாங்கள் செய்வோம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share