சொத்து வரி உயர்வு தொடர்பான வழக்கில் சென்னை, கோவை மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையர்கள் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முழுவதும் சொத்து வரி உயர்வு தொடர்பாக பல்வேறு மாநகராட்சிகள் மீது வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் நிலையில், இது தொடர்பாக பதில் அளிக்க மாநகராட்சிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பலமுறை அவகாசம் வழங்கியது.
எனினும் உரிய பதிலை அளிக்காததாலும் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாநகராட்சி ஆணையர்களின் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாதாலும் அதிருப்தியடைந்த உயர் நீதிமன்றம், ஈரோடு மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின், கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் ஆகியோர் வரும் 30ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
